TSSA UK நடாத்தும் பட்மின்ரன் சுற்றுப்போட்டி

தமிழ்பாடசாலைகள் விளையாட்டுச்சங்கம் (TSSA UK) நடாத்தும் படமின்ரன் சுற்றுப்போட்டி வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி 2022 இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடத்தின் முதல் விறுவிறுப்பான சுற்றுப்போட்டியாக இடம்பெறவுள்ள இந்த போட்டி , ஆண்கள் ,பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான, ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளாக இடம்பெறவுள்ளது. வயதெல்லை போட்டிகளாக இடம்பெறும் ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான போட்டிகள் உள்ளடங்கலாக திறந்த போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் Tolworth Recreation center, உள்ளக அரங்கில் இந்த சுற்றுப்போட்டி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் பட்மின்ரன் விளையாட்டு வீர வீராங்கனைகள்,மட்டுப்படுத்தப்பட்ட இடங்கள் மட்டுமே போட்டிகளில் இருப்பதால், வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்னதாக விரைவில் தங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.