கல்லுக்குள் கடவுள்..!

நீ என்னைத் தினமும்
தொட்டு விட்டுத்தான் போகிறாய் …
ஆனால் தொட்டு விட்டு …என்னை
ஏங்க விட்டு ஏன் போகிறாய் …
என் இனிய கவிதையே …
நான் சீற்றம் கொண்டு எழுதும்
போதும் … கருணையாய்
பனியாய் உருகும் போதும்
எழுதுகிறேன் … இதில்
இந்த உலகில் நடக்கும்
ஏனைய நடப்புக்களும் …எனது
மனக் கண்ணில் வந்து என்னை ஒரு
மன்னர் ஆட்சி அதிகாரத்தைப் போல
ஒரு மன்னனைப் போல
எழுத வைக்கிறாய் …
ஆனாலும் நீ நெடு நாள்
என்னை எதையும் எழுத விடாமல்
கூட ஏங்க வைக்கிறாய் …

இங்கே
புள்ளுக்குள் , கல்லுக்குள் … கடவுளே
இயங்குகிறான் ( அந்தக் கடவுளின் ஆதிப் பெயர் இயற்கை )
( இந்த முழு மூலத்தின் மூல படைப்பே இங்கே நாம் காணும் அனைத்தும் )
ஆனால் பாவம் அறியாமை இந்த மனிதர்களுக்குள் …
இதில் நான் நான்… எல்லாம் எனது எனது
எனும் மடைமையான அறிவு வளர்ந்த காரணமே … இங்கே இப்போது நாம் வாழும் உலகம் என மாற்றிக் கொண்டோம் …

இது இந்த
மனித இனத்தின் சுயநலமே தவிர …
இதற்க்கும் இந்த இயற்கை அன்னைக்கும் , இங்கே நாம் எல்லோரும் வணங்கும் மதமோ … இங்கே மதத்தை உருவாக்கிய ( ஏசு தனது மதத்தை இது கிறித்தவ மதம் என சொல்லவில்லை ) … இங்கே கிருஷ்ணனோ ? அல்லது சிவனோ ? ( இது இந்து மதம் எனச் சொல்லிச் செல்லவில்லை ) அதே போலத் தான் நபிகளும் கூட அவர்கள் எதைத் தனக்குள் உணர்ந்தார்களோ ? அதைப் பின்பற்ற , நாம் அதற்காக எந்தெந்த முயற்சியும் எடுக்க … உழைப்பு வேண்டும் …அதாவது சிந்தனை அறிவை நாம் கூர் படுத்திக்
கொண்டே இருக்க வேண்டும் … அதற்கான
எந்தெந்த முயற்சியும் எடுக்காமல்… இந்த அவதாரம் வரும் அது நம்மையெல்லாம் காப்பாற்றும் என்பதைவிட இந்த உலகில் கேளிக்கைக்குறிய விசயம் எதுமே இல்லை …

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *