ரிஷி உடன் ஸ்ராமர் | நேருக்குநேர் களம் காணும் முதல் நேர்காணல்
பிரித்தானிய பிரதமர் ரிஷிசுனக் மற்றும் எதிர்க்கட்சியான தொழிற்கட்சித்தலைவர் கியர் ஸ்ராமர் நேருக்கு நேர் களம் காணும் முதற் பொதுத் தேர்தல் விவாதம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பொதுத்தேர்தல் வரும் ஜூலை மாதம் 4 ம் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் அறிவிக்கப்பட்ட இந்த நேர்காணல், பிரித்தானிய ஐடிவி தொலைக்காட்சியால் வரும் செவ்வாய்க்கிழமை நடத்தப்படும் என்று என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் ரிஷி சுனக் மற்றும் தொழிலாளர் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் ஜூன் 4 செவ்வாய்க்கிழமை 21:00 பிஎஸ்டி மணிக்கு ஒருவருக்கொருவர் எதிர்கொள்வார்கள்.
Sunak V Starmer – The ITV Debate என்ற தலைப்பில் ஒரு மணி நேர நிகழ்ச்சியாக இடம்பெறவுள்ளது.
2015, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பொதுத்தேர்தல்களின் போது வேட்பாளர்களுடன் நேரடி நேர்காணலை நடாத்திய தொகுப்பாளர் ஜூலி எட்சிங்ஹாம், இந்த விவாதத்தையும் நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரடி விவாதம் பார்வையாளர்களுக்கு முன்னால் நடைபெறும் எனவும் சொல்லப்படுகிறது.
இதேவேளை ஏனைய கட்சித் தலைவர்களுடனான ஒரு நேர்காணல் நிகழ்ச்சியையும் ஒளிபரப்பவும் திட்டமிட்டுள்ளதாக ITV தெரிவித்துள்ளது.
இதேவேளை ஏனைய , பாராளுமன்ற உறுப்பினர்களைக்கொண்ட கட்சித்தலைவர்களையும் வழமைபோன்று இணைக்காதமை குறித்த விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.
ஏற்கனவே பிரதமர் ரிஷி உடனான முகத்துக்கு நேரே நேரடி நேர்காணலை மட்டுமே ஸ்ராமர் கேட்டிருந்தார் என்பது முக்கிய அம்சமாகும்.
அதேவேளை பிபிசி, சனல் 4 மற்றும் ஸ்கை நியூஸ் போன்ற ஏனைய தொலைக்காட்சிகளும் இதுவரை எந்த நேரடி விவாதங்களுக்கான திட்டங்களையும் இன்னும் அறிவிக்கவில்லை.
இருப
எது எப்படியாயினும் , ஜூலை 4 ஆம் திகதி பொதுத்தேர்தலுக்கு முன்னர் இரு பிரதான தலைவர்களுக்கும் இடையில் குறைந்தது இன்னிமோர் நேருக்கு நேர் நேர்காணல் இருக்கலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.