T20 உலகக்கிண்ணம் அவுஸ்ரேலியா வசம்| நியூசிலாந்தின் கிண்ணக்கனவு தகர்ந்தது
டுபாயில் நடைபெற்ற T20 உலகக்கிண்ணத்துக்கான இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா T20 உலகக்கிண்ணத்தை முதற்தடவையாக தம்வசப்படுத்தியது. இரு அணிகளும் அதிரடியாகவே துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும் அவுஸ்ரேலிய அணியின் மார்ஸின் அதிவேக துடுப்பாட்டத்தில் வெற்றி இலக்கை 18வது ஓவர் நிறைவிலேயே அடைந்து இந்த வெற்றியை பதிவு செய்த அவுஸ்ரேலியா உலகக்கிண்ண சம்பியன்களானது.
முன்னதாக நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களை குவித்தது.அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 48 பந்துகளில் 85 ஓட்டங்களை குவித்தார்.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி ,நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடி, வெற்றி இலக்கை 13 பந்துகள் மீத இருக்கும் வேளையிலேயே அடைந்து வெற்றியை பெற்றது.அணியின் டேவிட் வோர்ணர் மற்றும் மிச்சல் மார்ஷ் ஆகியோர் முறையே பெற்ற 53 மற்றும் 77 ஓட்டங்கள், விரைவாக இறுதி இலக்கை அடையமுடிந்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக இறுதி வரை ஆட்டமிழக்காது 50 பந்துகளில் 77 ஓட்டங்களை எடுத்த மிச்சல் மார்ஷ் தெரிவு செய்யப்பட்டார்.தொடர் ஆட்ட நாயகனாக அவுஸ்ரேலியா அணியின் டேவிட் வோர்ணர் அறிவிக்கப்பட்டார்.
முதற்தடவையாக உலக்கிண்ண T20 இறுதிப்போட்டியில் அவுஸ்ரேலியா அணி பதிவு செய்த வெற்றி இதுவென்பது என்பது குறிப்பிடத்தக்கது.