நீண்ட நேர சந்திரகிரகணம் இன்று
மிக நீண்ட நேர அளவைக்கொண்ட சந்திரகிரகணம் ஒன்று நவம்பர் மாதம் 19 திகதி இடம்பெறவுள்ளதாக வானியலாளர்கள் அறிவித்துள்ளனர்.இது இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர அளவைக்கொண்டதாகவும் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
15ம் நூற்றாண்டுக்கு பின்னதாக வரும் முதலாவது நீண்டநேர சந்திரகிரகணம் என்றும் சொல்லப்படுகிறது.
ஐக்கிய அமெரிக்கா மற்றும் அண்டிய நாடுகளில் முழுவதுமாக அவதானிக்க கூடிய இந்த சந்திரகிரகணம்,ஐரோப்பிய நாடுகளில் பகுதியளவு அவதானிக்கமுடியும் என்று சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட ஆறு மணித்தியாலங்களுக்கு கூடுதலாக சந்திரகிரகணம் தோன்றும் என்பதுடன் முழுவதுமான சந்திரகிரகண உச்சநிலை மொத்தமாக மூன்றரை மணிநேரம் அமையும் என்றும் குறிப்பிடப்படுகிறது.GMT நேரப்படி நவம்பர் 19 திகதிய அதிகாலை 6 02 க்கு ஆரம்பிக்கும் சந்திரகிரகணம் மதியம் 12.04 வரை தொடர்ந்து செல்லும் எனவும் வானியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்
இந்த வருடத்தின் இரண்டாவது சந்திரகிரகணமாக சொல்லப்படும் இது மிக நீண்ட நேர சந்திரகிரகணமாக 580 ஆண்டுகளுக்கு பின் பூமிக்கு தெரிவது இது என்பது குறிப்பிடத்தக்கது.