அரபு நாடுகளுடன் இஸ்ராயேலின் நட்புத் திட்டங்கள் மேலும் விரிவடைகின்றன.
ஆபிரகாம் ஒப்பந்தம் மூலம் இஸ்ராயேல் அரபு நாடுகளுடன் செய்துகொண்ட நட்பின் மூலம் மிகவும் நெருங்கும் நாடுகளிலொன்று மொரொக்கோவாகும். அவர்களிருவரும் ஒன்றிணைந்து தானியங்கிக் காற்றாடி விமானங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரண்டை மொரொக்கோவின் அல் – அவ்லா பிராந்தியத்தில் கட்டியெழுப்பத் திட்டமிடுகிறார்கள்.
அத்தொழிற்சாலைகளுக்கான ஒப்பந்தம் நவம்பர் 24 ம் திகதி இரண்டு நாடுகளுக்குமிடையே செய்துகொள்ளப்பட்டதாக மொரொக்கோ தெரிவித்திருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் இஸ்ராயேலின் தொழில்நுட்ப நிறுவனமான Bluebird Aero System இன் நடாத்தப்பட்டிருப்பதால், அவர்களுக்கு இத்திட்டத்தில் பெரும் பங்களிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொரொக்கோவின் இரண்டு தொழிற்சாலைகளிலும் தயாரிக்கப்படும் தானியங்கிக் காற்றாடி விமானங்கள் இராணுவத் தாக்குதல்களுக்காகவும், உளவுத்துறையின் தேவைகளுக்காகவும் பாவிக்கப்படும்.
சாள்ஸ் ஜெ. போமன்