வள்ளலாரும் தைப்பூசம் ஜோதி தரிசனமும்

வள்ளலார் 1823-ல் சிதம்பரம் உள்ள மருதூரில் வேளாளர் குடும்பத்தில் பிறந்தார். வள்ளலார் சிறுவனாக இருக்கும் போதே கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார். இவரின் பாடல்கள் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திருத்தணி கோவில்களில் எழுந்தருளியுள்ள (முருகன்) இறைவனின் புகழைப்பாடுபவை.வள்ளலார் ஆன்மீக வழிகாட்டியாகவும், குருவாகவும் விளங்கினார்.

வள்ளலார் ஜீவகாருண்யம்: வள்ளலார் அருளிய ஜீவகாருண்யம் மிகப்பெரிய தாக்கத்தை மக்களிடத்தில் ஏற்படுத்தியது. ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் வள்ளலார் உலகுக்கு தந்த புதிய கோஷம் ஜீவ காரணத்தால் கடவுள் அருளை எவ்வாறு பெறக்கூடும். அருள் என்பது கடவுள் தயவு ஜீவகாருண்யம் என்பது ஆத்மாக்களின் தயவுசெய்து சிறிய விளக்கை கொண்டு பெரிய விளக்கை ஏற்றுதல் போல் வள்ளலார் கண்ட புதிய நெறி ஒழுக்கம் இறுதிவரை செய்யாமலும் சமணர்களும் மேற்கொண்டது. ஜீவ இம்சை செய்யாமல் வள்ளலார் புலால் மறுத்தல் “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்”வள்ளலார் பிற
சான்றோர்களிடமிருந்து நுணுக்கமாக வேறுபடுகிறார்.

வள்ளலார் சத்திய ஞான சபை:
சன்மார்க்க நெறிகளும் வள்ளலார் நடத்தினார். “அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை” அருளையும் நமக்கு போதித்தவர் வள்ளலார்.
வள்ளலாரின் சத்திய ஞான சபை வள்ளலார் நிறுவினார்.
இறைவன் ஒளி வடிவானவன் உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்திய ஞான சபையை வள்ளலார் நிறுவினார்.

வள்ளலார் தைப்பூசம்:
வடலூரில் தைப்பூச திருவிழா கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை அமைந்துள்ளது இங்கு ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று “ஆறு” திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம் 151-ல் ஜோதி தரிசன விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வள்ளலார் வடலூர் ராமலிங்க சுவாமிகள் ஜோதியில் இரண்டறக் கலந்தது ஒரு தைப்பூச நன்னாளில்தான் அதனால்தான் வடலூரில் வருடந்தோறும் தைப்பூசத் திருநாள் என்பது சிறப்புப் பூசைகளும் ஜோதி தரிசன வழிபாடு விமர்சையாக நடைபெறும் சாஸ்திரம் தீப வழிபாடு பூஜைகள் மிகவும் வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. தீபத்தில் இருந்து வரும் ஒளியில் இறைவனை காணலாம் பெருமையும் கீர்த்தியும் பெற்றதுடன் ஜோதியுடன் வள்ளலார்
ஐக்கியமானவர்.
சன்மார்க்க நெறி வள்ளலார் நடத்தினார்
வள்ளல் பெருமான் தை பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்கள்.தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும் சிறப்பு வாய்ந்த தினமாகும். தை மாதத்தை மகர மாதம் என்று அழைப்பார்கள். மகரம் என்பது முடிந்த நிலையினை குறிப்பதாகும்.அகரம் -உகரம்- மகரம்= ஓம்-தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற நாள் சூரியன் உதிக்கின்ற நேரத்தில் சந்திரனும் வானத்தில் இருக்கும். அப்போது ஞான சபையில் இருந்து அக்கியான ஜோதி காண்பிக்கப்படும் அதாவது சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி சந்திரன் என்பது “மன அறிவு” சூரியன் என்பது “ஜீவ அறிவு” அக்னி என்பது “ஆன்மா அறிவு” சந்திரன் சூரியனின் அடங்கி, சூரியன் அக்னியில் அடங்கி, ஆகாயத்தில் அடங்கும் என்பதை தைப்பூசம் எனலாம். மனம் ஜீவனில் அடங்கி ஜீவன் ஆன்மாவில் அடங்கி, ஆன்மா சிவத்துடன் ஒன்றாக கலந்து விடும் என்பதை காட்டவே தைபூசம் வள்ளல் பெருமானால் அளிக்கப்பட்டது.
வள்ளலாரின் சிந்தனைகள் எண்ணங்களின் வெளிப்பாடு தெரிந்தது சத்திய ஞான சபையை நிறுவிய மக்களிடத்தில் ஜீவஜோதியின் வழியில் வள்ளலார் அருள் காட்சி கொடுத்தார் என்று கடவுளை மோட்சத்தை அடைய எளிய வழி பிற உயிர்களின்
கொல்லக்கூடாது. என்று இறைவனை ஜோதி வடிவில் காணலாம் வள்ளலார் உணர்த்தினார். ” “அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை” என்று வள்ளலார் விளக்கினார்.

எழுதுவது : மா.நந்தினி
ஆய்வியல் நிறைஞர் (தமிழ் ) விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) திருச்செங்கோடு.