வயலும் வாழ்வும்

ஊரே செழிப்போடு
நானே உன்னோடு!

வயக்காட்டு வரப்புல
பயபுல்ல நினைப்புல..!
பக்குவமா சொல்லுபுள்ள!
பாவி மனம் தேடுதே
உன்னை…!
வாழ்க்கை நம்பி இருக்குதே மண்ணை!

மாடு இரண்டை வச்சுக்கிட்டு…
தோடு கூட வாங்க
முடியலையேனு…

பட்டணம் தான்
போனேனே…
பணம் காசு பாக்கலாமுனு…

பணத்தை பாத்தேனே
புள்ள…
குணத்தை தேடியும்
கிடைக்கலையே…

உன்னைப் போல…
என்னைப் பாக்க…
யாருபுள்ள இருக்கா…?

ஆசை வச்ச …
மாமன் பொண்ணே..!
மீசை வச்ச…
ஆம்பளைக்கு…

காசு ,பணம்
போதாது….கண்ணே
தூசுபட்டா கூட
நீ துடிச்சிடுவாயே
பெண்ணே…!

அந்த நேசத்தை ..
தேடி…
வயக்காட்டுக்கே…
வந்திடறனே!

கால் கஞ்சி
குடிச்சாலும்…
கண்ணே…!
உன் கையாலே…

தேவனின் அமிர்தம்
அல்லவா!

பழைய சோற்றுக்கு…
வந்திடுவேன்
நாளை…!

விடியட்டுமே
நல்ல காலை!

எழுதுவது : ர.ஜெயபாலன்