இரண்டரை வருடங்களின் பின்னர் மைக்ரோனேசியாவை வந்தடைந்தது கொவிட் 19.
2020 இல் ஆரம்பித்து உலக நாடுகளிலெங்கும் பரவிய கொவிட் 19 ஐத் தமது தீவுகளுக்குள் நுழையாமல் தடுத்து வைத்திருந்தது மைக்ரோனேசியா. பசுபிக் சமுத்திரத்தில் பாபுவா நியூகினியாவுக்கு வெளியே இருக்கும் அத்தீவுகளில் சுமார் 110,000 பேர் வாழ்கிறார்கள். கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகளின் மூலம் வெளியாரை உள்ளே நுழைய விடாமல் செய்து தனது குடிமக்களைக் காப்பாற்றி வைத்திருந்த மைக்ரோனேசியாவுக்குள் சமீபத்தில் சிலர் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜனவரி 2021 இல் மைக்ரோனேசியாவின் நாலு பிராந்தியங்களில் ஒன்றான Pohnpei இல் கடற்படையைச் சேர்ந்த ஒருவருக்குக் கொவிட் 19 இருப்பதாகக் காணப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அதன் பின்பு அங்கே அத்தொற்று இதுவரை காணப்படவில்லை. ஆகஸ்ட் முதலாம் திகதி நாட்டின் எல்லைகளைத் திறந்துவிடத் தீர்மானித்திருந்த மைக்ரோனேசியாவின் இரண்டு பிராந்தியங்களில் சிலர் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ.போமன்