காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது வன்முறைத்தாக்குதல் | பொறுப்புக்கூறக் கோரும் சட்டத்தரணிகள் சங்கம்

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் உள்ள காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது படையினர் நேற்றிரவு வன்முறை மற்றும் வன்முறையை பிரயோகித்து தாக்குதல் நடத்தியதை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) வன்மையாக கண்டிக்கிறது எனக்குறிப்பிட்டுள்ளது.

மேலும் அவர்களின் அறிக்கை சுட்டிக்காட்டியதாவது,

நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் பொலிஸாரும் காலி முகத்திடலுக்கான அணுகு வீதிகளை அடைத்து பொதுமக்களை அப்பகுதிக்குள் நுழையவிடாமல் தடுத்திருந்தமை வெளிப்படை. அப்பகுதிக்குள் நுழைய முயன்ற சட்டத்தரணிகள் படையினரால் தடுக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்களை குறிவைக்கும் ஆயுதப்படைகளின் நியாயமற்ற மற்றும் வன்முறையான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு BASL கோருகிறது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவரது அரசாங்கமும் சட்டத்தின் ஆட்சி மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் BASL கோருகிறது.

புதிய ஜனாதிபதி பதவியேற்ற முதல் நாளிலேயே பொதுமக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கு ஆயுதப்படைகளை பயன்படுத்துவது வெறுக்கத்தக்கது மற்றும் நமது நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்த சம்பவங்கள் குறித்து உடனடி விசாரணை நடத்தவும், சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களுக்கு எதிராகவும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க BASL கேட்டுக்கொள்கிறது. இதற்கு உத்தரவு பிறப்பித்தவர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் சாலியபீரீஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *