உலகின் 14 கடுமையான மலையுச்சிகளில் 9 ஐ ஏறி முடித்துவிட்ட நோர்வீஜியப் பெண்.
ஆண்களுக்கிணையாகச் சாதனை நிகழ்த்துவது பெண்களாலும் முடியும் என்று நிரூபிக்கும் எண்ணத்துடன் மலையேறுவதில் தனது குறிக்கோளை எட்டிக்கொண்டிருக்கிறார் கிரிஸ்டின் ஹரிலா. 8,000 மீற்றர் உயரத்துக்கு மேலான உலகில் 14 சிகரங்களையும் மிகக் குறைந்த கால இடைவெளியில் ஏறியிறங்க வேண்டும் என்பது ஹரிலாவின் எண்ணம். அவைகளில்
நேபாளத்தில் பிறந்து பிரிட்டிஷ் குடிமகனாகிய நிர்மல் புர்ஜா மலைகளை ஏறுவதில் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார். உலகின் அதிக உயரமான 14 சிகரங்களையும் ஆறு மாதங்கள் இரண்டு நாட்களில் ஏறி அவர் படைத்த சாதனையை உடைப்பதே கிரிஸ்டின் ஹரிலாவின் குறியாகும். ஐந்தே மாதங்களில் அந்தப் பதினாலு சிகரங்களுக்கும் ஏறி இறங்கத் திட்டமிட்டிருக்கிறார் ஹரிலா.
ஏப்ரல் மாதத்தில் நேபாளத்திலிருக்கும் ஆறு மலையுச்சிகளையும் ஹரிலா ஏறினார். மே மாதத்தில் டௌலகிரி, கஞ்சஞ்ஜுங்கா, எவரெஸ்ட், லோட்ஸெ, மக்கலு, அன்னபூர்ணா ஆகிய சிகரங்களை ஏறினார். ஜூலை மாதத்தில் நங்கா பிரபாத், புரோட் பீக், கே 2 ஆகிய சிகரங்களை ஏறியிறங்கினார் ஹரிலா. பாகிஸ்தானிலிருக்கும் புரோட் பீக் என்ற உலகின் 12 வது உயரமான சிகரத்தை அவர் 76 வது நாளில் எட்டினார்.
வியாழனன்று ஹரிலா தனது இன்ஸ்டகிராமில் புரோட் பீக்கை எட்டியதைப் பற்றிச் செய்தி வெளியிட்டிருந்தார். அதை அடுத்து முகாமுக்குத் திரும்பும் அவர் Gasherbrum I and II ஆகிய இரண்டு சிகரங்களையும் ஏறவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
பாகிஸ்தானிலிருக்கும் மலையுச்சிகளை எட்டுவதற்காக இவ்வருடம் வழக்கத்தை விட அதிகமானோர் முயற்சி செய்கிறார்கள். அந்த முயற்சிகளில் இதுவரை ஆறு பேர் இறந்திருக்கலாம் என்று குறிப்பிடப்படுகிறது. அவர்கள் தற்போது காணாமல் போனவர்கள் பட்டியலில் இருக்கிறார்கள். சடலங்கள் கிடைத்தால் மட்டுமே பாகிஸ்தான் அவர்களை இறந்தவர்கள் கணக்கில் சேர்க்கும்.
சாள்ஸ் ஜெ. போமன்