2022 உதைபந்தாட்ட உலக்கக்கோப்பைக்கான தேசியக் குழுவினரை அறிமுகம் செய்யும் முதல் நாடு ஜப்பான்.
இதுவரை ஜப்பான் பங்கெடுத்திருக்கும் ஏழு உதைபந்தாட்டத்துக்கான உலகக் கோப்பைப் பந்தயங்களில் அவர்கள் 16 குழுக்கள் படியைத் தாண்டியதில்லை. இந்த முறை தனது குழு காலிறுதி மட்டத்துக்குப் போகும் என்று தன்னம்பிக்கையுடன் குறிப்பிட்டு பங்கெடுக்கப்போகிறவர்களின் பெயர்களை வெளியிட்டார் பயிற்சி நிர்வாகி ஹஜீமெ மொரியாஷு. குழுவில் 26 வீரர்களின் இடம்பெற்றிருக்கிறார்கள்.
தனது குறிக்கோள் ஆகக்குறைந்தது காலிறுதிப் போட்டி என்றாலும் அது ஒரு இலகுவான குறிக்கோள் அல்ல என்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மொரியாஷி தெரிவித்தார். நவம்பர் 23 ம் திகதி காலிபா இண்டர்நாஷன்ல் அரங்கில் தனது முதல் மோதலில் ஜேர்மனியை ஜப்பான் எதிர்கொள்ளும். தவிர, பிரான்ஸ், ஸ்பெய்ன், கொஸ்டா ரீகா ஆகிய நாடுகள் ஜப்பானின் Group E இல் இருக்கின்றன.
செல்டிக்கில் விளையாடும் கியோகோ புருஹாஷி, மற்றும் கெங்கி ஹறாஹுஷி, யுயோ ஒஸாகா ஆகிய திறமையானவர்கள் ஜப்பானின் குழுவில் இடம்பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிக் கேள்விகள் எழுப்பப்பட்டன. “அவர்களுடன் சேர்ந்து உலகக் கிண்ணத்தை வெல்ல விரும்பினேன் ஆனால், அவர்களுக்கு இப்போட்டிகளில் பங்குபற்ற முடியவில்லை,” என்று மொரியாஷி பதிலளித்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்