பெண்களுக்கு 3 ம் வகுப்பிற்கு மேல் பயில தடை விதிப்பு..!
மன்னனுக்கு அந்நாட்டில் மாத்திரம் சிறப்பு ,கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு .அதிலும் பெண்கள் கல்வி கற்பது தன் வீட்டுக்கும் தன் நாட்டுக்க பெருமை .பாரதி கண்ட புதுமை பெண் பல இடங்களில் கண்டாலும் இதற்கு தடை விதிப்பது போல பெண்கள் 3ம் வகுப்பிற்கு மேல் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டுள்ளது ஓர் நாட்டில்.
ஆம் ,ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றியது .இதனையடுத்து அங்கு பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இதில் ஒன்று தான் பெண்கள் 3ம் வகுப்பிற்கு மேல் படிக்க தடை விதிக்கப்பட்டிருக்கின்றமை.இவ் சம்பவத்தினையடுத்து பலரும் அதிர்ச்சியடைந்த நிலையில் அனேகமானவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதே வேளை 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை பள்ளியை விட்டு வெளியேற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்படடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாலிபான் இயக்கத்தினால் பெண்களுக்கு எதாராகவும்,குழந்தைகளுக்கு எதிராகவும் விதிக்கப்பட்டுவரும் தடைகளுக்கு உலக நாடுகளும் ,பல்வேறு அமைப்புகளும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.