மேடா, டுவிட்டர் உரிமையாளர்களுக்கிடையில் பனி போர்..!
சமூக ஊடகங்களை பயன் படுத்தாதவர்கள் யாருமே இருக்க முடியாது .அந்தளவிற்கு சமூக ஊடகங்கள் மிக பிரபலமாக உள்ளன.இந்த சமூக ஊடகங்களால் பல்வேறு நன்மைகள் பல்வேறு தீமைகள் என் எல்லை கடந்து செல்கின்றன. இந்த வகையில் இவ் சமூக ஊடகங்களை அறிமுகம் செய்தவர்கள் ஒரு சிலருக்கிடையில் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் முதல் மேடா நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் ஜுக்கர் பேர்க் மற்றும டுவிட்டரின் உரிமையாளர் எலென் மாஸ்க் ஆகிய இருவருக்கிம் பனி போர் நிகழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் 5 ம் திகதி திரேட்ஸ் என்ற செயலியை டுவிட்டருக்கு போட்டியாக அறிமுகம் செய்தார்.
அதன் பிறகு இருவரும் வெவ்வேறு கருத்துக்களை வலைத்தளங்கிளில் பதிவிடடு வருகின்றனர்.
இதன் படி
மார்க் ஜூக்கர்பெர்க் தனது திரெட்ஸ் பக்கத்தில், “எலான் எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்பவர் இல்லை என்பதை நாம் அனைவரும் ஒப்புக் கொள்ள முடியும் மற்றும் அதிலிருந்து வெளியேற வேண்டிய நேரம் இது . நான் அவருக்காக நேரம் ஒதுக்கினேன். டானா வைட் (அல்டிமேட் பைட்டிங் சாம்பியன்ஷிப்பின் தலைவர்), இதனை ஒரு தொண்டு நிறுவனத்தின் முறையான போட்டியாக மாற்ற முயற்சித்தார். ஆனால் எலான் திகதியை உறுதி செய்யவில்லை, பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை தேவை என்று கூறுகிறார். பின்னர் என்னை கொல்லைப்புறத்தில் பயிற்சியை மேற்கொள்ள சொல்கிறார். சரியான திகதிப் பற்றி எலான் எப்போதாவது தீவிரமாக எடுத்துக் கொண்டால், என்னை எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். இல்லையெனில், கடந்து செல்ல வேண்டிய நேரம். நான் எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் நபர்களுடன் போட்டியிடுவதில் கவனம் செலுத்தப் போகிறேன்” என தெரிவித்து உள்ளார்.
இதனை செயின்ட் கிளேர் ஆஷ்லே என்பவர் டுவிட் செய்துள்ளார். இதற்கு பதிலடியாக மார்க் ஜூக்கர் பேர்க் ஒரு சிக்கன் என குறிப்பிட்டுளார்.