AI யும் எதிர்காலமும்-எழுதுவது கவிஞர் கேலோமி

காலத்துக்கும்
அறிவுக்கும்
உள்ள
துவந்த
யுத்தம்
தானோ!
செயற்கை
நுண்ணறிவு
என்பது
நம்முடைய
இராமாயணம்
மகாபாரதம்
பாகவதம்
பைபிள்
திருக்குரான்
எங்கும்
வெள்ளிடைமலையாக
கொட்டி
கிடக்கிறது.
அஸ்திரம்
சஸ்திரம்
என்பது
பாஸ்வேர்ட்
வெப்பன்கள்
தான்.
ஆனால்
அன்றைய
அறிவு
இலக்குக்கு
உரியவனை
மட்டும்
தாக்கும்.
இன்றைய
நுண் அறிவியல்
ஆயுதம்
அனைவரையும்
தாக்கும்.
ஒன்றை
நோக்கிய
பயணத்தில்
நிறைவு
என்பது
நிச்சயம்
ஒன்று.
வெறும்
தகவல்களை
மட்டும்
நம்பி
ஆர்ட்டிபிசியல்
நுண்ணறிவு
இயங்குகிறது.
இது
நமது
கற்பனைகளை
நமது
அறிவை
காலத்தை
அதனுடன்
சேர்த்து
இன்றைய
செல்போன்
போல்
மனிதனை
அடிமை படுத்தலாம்.
பலவிதமான
மனநோய்கள்
ஆரோக்கிய
சீர்கேடு
உருவாக்கலாம்.
முழு
நேர
கேளிக்கையில்
இளைஞர்களின்
அறிவை
போதையில்
காமத்தில்
காலவிரயத்தில்
கிட்டி
சேர்க்கலாம்.
ஆனால்
புராணங்களில்
வந்த
பல
விடயங்களை
கட்டுகதை
என்ற
அறிவியல்
கதைகளின்
அறிவில்
விஞ்ஞானம்
வளர்த்தது.
நூறு
டெஸ்ட்ட்யூப்
பேபிகள்
கௌரவர்கள்.
பரிசுத்த
ஆவியில்
பிறந்த
ஜீசஸ்
முகமது
நபி
நடத்திய
போர்கள்
மகாபாரத
போர்
வியூகங்கள்
இலக்கங்கள்
எண்ணிக்கைகள்
தந்திரங்கள்
கிருஷ்ணரின்
கீதாசாரங்கள்
பதஞ்சலி
யோக சூத்திரங்கள்
இவைகள்
எல்லாம்
அளவையில்
அடங்காத
விந்தைகள்.
உலகில்
இங்கு
எதுவும்
புதியதில்லை.
தேவன்
அசுரன்
பிரம்மா
விஷ்ணு
சிவன்
முருகன்
இயேசு
அல்லா
புத்தன்
நானாக்
எல்லாம்
ஒவ்வொரு
கேலக்ஸியின்
தத்துவத்தின்
புரிதலில்
சுடர்களே!
யார்
வந்தாலும்
போனாலும்
இயற்கை
தன்னை
மீட்டெடுக்கும்.
ஆற்றல்
எங்கும்
அழிவதில்லை.
ஒன்று
மற்றொன்றாக
பரிணமிக்க
வாழ்த்துகின்றேன்.
விஞ்ஞானம்
அறிவும்
எல்லையுமல்ல.
அதுவும்
ஒரு
வாழ்க்கையின்
அங்கம்.
ஞானத்தீ
பற்றி
எரியட்டும்.
பிரபஞ்சத்தின்
அனைத்து
கோள்களில்
வாசம்
செய்பவர்களின்
மெல்லிய
நேசத்தில்.
அளவையின்
புரிதலில்
அளவைகள்
அடங்குவதில்லை. கேலோமி🌹🌹🌹🌹🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *