வரலாற்று சாதனைப்படைத்த இந்தியா..!
உலக மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓர் விடயம் தான் சந்திரயாண் -03.கடைசி நொடிகள் மட்டும் அனைவரினதும் இதயத்தை மிக வேகமாக அடிக்க வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
வேகமாக செல்வதை விட விவேகமாக செல்வது சாலச்சிறந்தது என்று சொல்வார்கள்.அந்த வகையில் சந்திரயான் -03 ஒரு மாதமாக பயணித்து இன்றைய தினம் தனது இலக்கை அடைந்தது.
இதன் மூலம் அமெரிக்கா,ரஷ்யா,சீனா ஆகியவற்றிற்கு அடுத்தப்படியாக 4 வது இடத்தை இந்தியா தன்வசமாக்கி கொண்டுள்ளது.இதேவேளை தென் துருவத்தில் தடம் பதித்த 1வது நாடு என்ற அந்தஸ்தையும் சுவிகரித்துக்கொண்டது.
நிலவில் சந்திரயான் -03தரையிறங்கும் காட்சியை இஸ்ரோ நேரடியாக வழங்கியிருந்தது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்த்து மகிழ்ந்தனர்.தரையிரங்கிய பின் இஸ்ரோ விஞ்ஞானிகள் கை தட்டி மகிழ்ந்தனர்.இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர் இஸ்ரோவிற்கு.அப்துல் கலாம் ஆரம்பித்து வைத்த மரம் இன்று அழகிய பழத்தை வழங்கி நிற்கின்றது.
சந்திரயான்-03 பயணித்துக்கொண்டிருந்த சமையம் அதற்கு போட்டியாக லூனா-25 வநதது. ஆனால் எவ்வளவு வேகமாக வந்ததோ அதே வேகத்தோடு நிலவில் நொருங்கி போனது. இதனால் போராலும் போராடிக்கொண்டிருந்த ரஷ்யாவிற்கு பெரும் சோதனையாக அமைந்திருந்தமை குறிப்பிடதக்கது.இதனிடைய தொடர்ந்தும் பயணித்த சந்திரயான் -03 இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடுமையான முயற்சியினால் மெதுவாக தரையிறங்கி வெண்ணிலவில் இந்தியா எனும் வெற்றிக்கொடியை நாட்டியது.