செயற்கை நுண்ணறிவு தொடர்பான மாநாட்டில் எக்ஸ்,மெடா,கூகுள் தலைமைகள் பங்கேற்பு..!
எல்லாத்துறைகளிலும் செயற்கை நுண்ணறிவானது தனது தாக்கத்தை செலுத்திவருகிறது. இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் 13ம் திகதி நடைப்பெற இருக்கின்றது.இது இயந்திரங்களை உருவாக்கி மனிதர்களை போல் செயற்பட வைக்கும் கணணி அறிவியல் வளர்ச்சியின் உயர்ந்த நிலையாகும்.
இது தொடர்பாக விழிப்புணர்வை அறிந்துக்கொள்ளும் நோக்குடன் இந்த மாநாடு ஒழுங்கு செய்யபட்டிருக்கின்றமை குறிப்பிடதக்கது.இதில் எக்ஸ்(டுவிட்டர்) நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்,மெட்டா நிறுவனத்தின் உரிமையாளர் ஜூக்கர் பேர்க்,கூகுள் நிறுவன தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள இருக்கின்றமை குறிப்பிடதக்கது.
செயற்கை நுண்ணறிவால் எதிர்காலம் பாரிய சவாலை சந்திக்க நேரிடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதே வளை செயற்கை நுண்ணறிவு தொடர்பாக பலரும் பலவாறான கருத்துக்களை முன்வைத்துள்ள நிலையில் தான் இந்த மாநாடு நடைப்பெறுகின்றமை குறிப்பிடதக்கது.