யாழில் ஆர்ப்பாட்டப்பேரணி..!
உயிர் பிரியும் நேரத்தை விட உறவுகள் பிரியும் நேரம் மிக வேதனையானது. நம்முடைய சொந்தங்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்று தெரியாமல் தினம் தினம் நரக வேதனை அனுப்பவிப்பவர்கள் ஆயிரமாயிரம் நம் நாட்டில்.
இன்றைய தினம் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் .இதனை முன்னிட்டு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்கள் எங்கே சென்றார்கள்…? தமிழின படுகொலைக்கு சர்வதே நீதி விசாரணை வேண்டும். பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குதல்,இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்துதல்,அரசியல் கைதிகளை விடுதலை செய்தல்,தமிழர் பிரதேசங்களில் சட்டவிரோத குடியேற்றங்களை தடுத்தல் என இன்னோரான கோரிக்கைகளை முன்வைத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ,பொது மக்கள்,அரசியல்வாதிகள் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.
இவ் ஆர்ப்பாட்டமானது இன்று காலை யாழ் பிரதான பஸ் நிலையத்தில் ஆரம்பமாகி பேரணியாக சென்று யாழ் நகரை சுற்றி யாழ் முனியப்பர் கோயிலடியில் நிறைவடைந்தமை குறிப்பிடதக்கது.
இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்களால் தமது கோரிக்கைகள் எழுதப்பட்ட பல்வேறு பாதாதைகள் மூலமும் குரல் வழி கோசங்கள் மூலமும் தமது எதிர்ப்பினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடதக்கது.