காதலும் நம்பிக்கை துரோகமும்-எழுதுவது கவிஞர் கேலோமி
வசதி
வேலைவாய்ப்பு
சொத்து
அழகு
கல்வி
சாதி
இனம்
மொழி
மதம்
என்ற
வளையத்தில்
மாத்திரம்
அடைக்கப்பட்ட
காதல்
காற்று
பைகள்
எந்த
நேரமும்
துரோகத்தால்
வெளியேறிவிடும்.
நம்பிக்கை
முழுமையானது
தான்
ஆனால்
அது
துரோகத்தின்
பிறப்பிடமாகவே!
உள்ளது.
காதலும்
நம்பிக்கை
துரோகமும்
நடத்தும்
சதுரங்க
வேட்டையில்
பொருள்
மன
மான
உடல்
இழப்புகள்.
இங்கு
கடைசி
வரை
நேசிக்கும்
காதலும்
நட்பும்
காண்பது
அரிது.
எதிர்பார்ப்பு
இல்லாத
காதல்
இங்கு
எங்குமில்லை.
எதிர்பார்க்காவிட்டால்
இன்று
அது
காதலுமல்ல.
காதல்
சுகமான
எதிரி.
நவீன
கொலையாளி.
இங்கு
கொல்லப்படுபவர்கள்
உண்மையான
அன்புக்கு
அடிமையானவர்கள்.
அவர்கள்
உடல்
பகுதிகள்
அவர்கள்
காதலை
போல்
கண்டதுண்டமாக.
கலிகாலத்தில்
காணமுடியாதது
உண்மை
காதல்.
இங்கு
சில
நவீன
காதல்களும்
உண்டு.
அது
கள்ள காதல்
என்ற
நாம கரணம்
மாற்றி
திருமணம்
மீறிய
உறவு
என்று
புனிதப்படுத்தபடுகிறது.
குடிகாரர்கள்
மதுப்பிரியர்கள்
என்று
ஆகி
போன
உலகில்
போதை
பிரியர்கள்
பல
மாதுக்கள்
மேல்
பிரியர்கள்
என்று
கட்டமைக்கப்பட்ட
சமூகம்
அதன்
வலிமை
என்றும்
நன்மை
நன்றி
மறந்தது. கேலோமி🌹🌹
மேட்டூர் அணை.