இந்த உணவுகள் கிருஷ்ணருக்கு மிகவும் பிடிக்கும்..!
நாளை கிருஷ்ண ஜெயந்தி , கிருஷ்ண ஜெயந்தி அனைவருக்கும் பிடிக்கும் .ஆனால் கிருஷ்ணருக்கு என்னவெல்லாம் பிடிக்கும் உங்களுக்கு தெரியுமா? உணவு பிரியரான கிருஷ்ணர்க்கு வெண்ணை மிகவும் பிடிக்கும் திருடி சாப்பிட்டவர் கிருஷ்ணர் என்று சொல்வோரும் உண்டு.உப்பு சீடை,வெள்ள சீடை,தேன் குழல், அப்பம்,வடை,அவல்,வெண்ணெய்,பாயாசம் என்பன மிகவும் பிடிக்கும் இதில் சில உணவு பண்டங்களை எப்படி செய்யலாம் என்று உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.
தேன் குழல்
தேவையான பொருட்கள்
1.அரிசி மா 4 தம்ளர்
2.உளுந்து மா 1 தம்ளர்
3.சீரகம் தேவைக்கேற்ப
4.கருப்பு எள்ளு தேவைக்கேற்ப
- வெண்ணை தேவைக்கேற்ப
6.பெருங்காய தூள் தேவைக்கேற்ப
7.நீர்தேவைக்கேற்ப
8.தேங்காய் எண்ணெய் - பொரிப்பதற்கான பாத்திரம்
அனைத்தையும் கலந்து கொள்ள வேண்டும் பிறகு நன்றாக பிசைந்து தேன்குழல் சொப்பால் பிழிந்து கொதிக்க வைத்திருக்கும் எண்ணெய்யில் போட்டு பொண்ணிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இந்த உணவு பண்டங்களை செய்து வைத்து ,கிருஷ்ணருக்கு மலர் வைத்து , துளசி வைத்து , விளக்கேற்றி பூஜை செய்து வழிப்பட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
எழுதுபவர் உஷா வரதராஜன்.
பெங்களூர்.