நாவற்கனி
அடிப்பெண்ணே…
நாவல்கனியும் சுவையானதோ நங்கையின் இதழ்பனியும் தீதானதோ இளஞ்சூடு கொண்ட தேகப்பவழமும் என் கழுத்தோரம் மாலை சூடாதோ
புவிபுலரும் பொழுதோடு உன் புறமுதுகோ எனதேடு கவிவிரல் கொண்டு நானெழுத வெய்யில் பட்ட புழுவாய் நெளியாதோ
வீணை மீட்டிடும் விரல்களும் சோர்வாகும் நீர்த்தாகம் கண்டோடும் நீர்நிலை நீதானே
கிளிகொத்தும் கோவையாய் என் உளி செதுக்கும் சிலையாய் உருண்டோடும் சக்கரமாய் உள் நெஞ்சத்தில் தடம்பதித்தாய்
நெய்ப்பானை சுழலும் மத்துபோல் என் விழிப்பார்வை சுழலுதடி புவி ஓட்டம் குறைந்தால் பருவநிலை மாறுபடும் உன் விழி மூடும் நிலை வந்தால் என்நிலை பறிபோகும். ஆக்கம் ✍️ இருளம்பட்டு ப.கல்யாணசுந்தரம்