சேற்று வயலும் செங்கதிரும்

சேற்றுவயலும் செங்கதிரும்

மண்ணைக்குழைத்து மணியை விதைத்து மனம்நிறைத்து உடலை உழைத்து வியர்த்தாடும் முத்துதிர்த்து நடந்தனன் நாற்பது நாளென

நாற்றென பேதையை வாஞ்சையுடன் வாரியணைத்து வஞ்சகமில்லா நெஞ்சத்தில் சேற்றுடன் சங்கமித்து சமதளமமைத்து

சாளரம்விட்டு சங்கதிபாடி சங்கத்தமிழ் சொல்லோடி பசும்பிள்ளையை நட்டுவிட்டு

மும்மாதம் முகம்காண வாடாது வடிய நீர்விட்டு வாயுரைத்துப் பாடிய பொழுதினில் நெடுநெடு வளர்ந்து மஞ்சளகம் செங்கதிராள் வாஞ்சையுடன் தவழ்ந்தாடினாள் என் மடியில்
இருளம்பட்டு
ப.கல்யாணசுந்தரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *