அரை மணி நேரம் தாமதமாய் புறப்படட ரயில்

ரயில் பயணம்❗

அன்று ஒரு நாள்
ஐந்தே நிமிடம் பயணம் ஆரம்பம்
யாரோ செல்லக் கேட்டு
அவசரமாய் ஏறி அமர்ந்தேன்
ஆசனத்தில்
அரை மணி நேரம் கடந்த பின்னே புறப்பட்டது புகைவண்டி ❗

ஒரு பெட்டியின்
ஜன்னல் வழியே
எட்டிப் பார்க்கிறேன்
தலையை தட்டித் தடவி
என்னை விட்டும்
எட்டிச் செல்கிறது தென்றல்❗

தவளையை விழுங்கிய
பாம்பு போல்
வளைந்து நெளிந்து
வரிசையாய்
கவலை மறக்கும்
காட்சிகள் தந்து
விரைந்து சென்றது புகைவண்டி ❗

புன்னகை பூத்த முகம்
முன்ன பின்ன பார்த்ததில்லை
ஊர் பேரும் தெரியவில்லை
தொலைபேசி காதோரம்
கதை பேசிக் கொண்டிருந்தாள் ❗

என்னைத்தான் பார்க்கிறாள்
என்ற எண்ணம் எனக்குள்ளே
எடுப்பாய் அமர்ந்து கொண்டேன்
என்ன நிலைத்தாலோ
இடம் மாறி சென்று விட்டாள் ❗

பகல் பொழுதை எல்லாம்
சுருட்டிச் சூரியன்
இரவெனும்
சுருக்கு பைக்குள்
சுறுசுறுப்பாக திணித்துக் கொண்டிருந்தான்❗

சூடு தணிந்தது
மெல்ல மெல்ல
ஆடும் மாடும்
காடும் கழிந்து
கிராமங்கள் நகர்ந்து
நகர்ப்புற
நாகரிகத்தின் உச்சத்தில்❗

ஆள் பாதி
ஆடை பாதி
ஆண் பெண்
அடையாளம் தெரியாமல்
ஆங்காங்கே
அமர்ந்திருக்கும் கடற்கரை ஓரம்❗

உள்ளே இருந்தபடி
ஓரக் கண்ணால்
உற்றுப் பார்த்தபடியே
ஊர்ந்து செல்ல
உரிய இடம் வந்தது
இறங்கிச் செல்ல….❗

வடே…..வடே… வடே
உனு..உனு.. வடே
வடே….வடே….வடே இஸ்ஸு வடே
வடே….வடே…வடே… இறால் வடே
வாங்கி வாயில் போட்டு
மென்று கொண்டே வீடு சென்றேன்❗

அப்பாஸ். அ. நவாஸ்
இலங்கை
வவுனியா…✍️✍️✍️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *