5ம் தர மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற அடிப்படையில் பாடசாலையின் பிரதி அதிபர் கைது..!
காலி ஆரம்ப பாடசாலையின் பிரதி அதிபர் ஒருவர் 5ம் தர மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக குறித்த மாணவியின் பெற்றோர் பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து குறித்த பிரதியதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் காராப்பிட்டிய சட்ட வைத்திய அதிகாரியிடம் குறித்த சிறுமி யை அனுமதிக்கப்பட்டதையடுத்து ,சந்தேகத்திற்குரிய பிரதி அதிபர் ,ஹபராதுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதி அதிபருக்கு 59வயதாகும்.இவர் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.