மொழிகள்
மொழிகள்
அதன்
பெருமைகள்
பேசியது
போகட்டும்.
அறிஞர்கள்
புலவர்கள்
புரவலர்கள்
ஆதரித்தது
போகட்டும்.
அறம்
சார்ந்த
நீதி
நூல்கள்
கலி காலத்தில்
சாதித்தது
தான்
என்ன?
பெருமை
பேசும்
மதங்கள்
அவரவர்
தாய்
மொழிகளில்
வந்து
என்ன
சாதித்தது?
வார்த்தைகளில்
பேசும்
நடைகளில்
உலகியல்
வாழ்க்கையில்
தனது
அறுவருப்புகளை
தெளித்தது.
நாகரிகமாக
பிறர்
மனம்
கோணாமல்
பேசும்
மனிதர்கள்
அரிதிலும்
அரிதானார்கள்.
சைகைகள்
குறியீடுகள்
கூட
ஆபாசம்
கலந்தது.
கேட்ட
வார்த்தைகளை
பேசியே
குழந்தைகள்
கெட்ட
வார்த்தைகளுக்கு
அடிமையானார்கள்.
மொழிகள்
பெருமை
பேசி
கெட்டது
போதும்.
தங்கள்
திருவாய்களை
மூடி
தயவுசெய்து
மௌனம்
பழகுங்கள்.
மொழிகளே
நீங்கள்
அறிவுஜீவி
ஆகி
இங்கு
மனிதர்களை
கெடுத்தது
போதும்.
எது
பெரிய
மொழி!
மதம்!
இனம்!
நாடு!
என்றால்
இன்றே
மானுடம்
அழிந்து
போகும்
இராசாயண
போரில்.
பாசைகள்
மனிதம்
அழித்தது
போதும்.
ஓசைகள்
அற்ற
காட்டில்
மனிதன்
இனவெறி
பிடித்த
ஓநாய்கள்.
தொடர்புகொள்ள
இனி
ஓரே
மொழி
வருங்காலத்தில்
A1
தொழில்நுட்பத்தில்
நிச்சயம்
வரும்.
தாய்மொழி
தேவையில்லை
என்று
உதறிய
கல்வியாளர்களால்
நிச்சயம்
நம்
சந்ததி
மடை
மாற்றப்படும்.
இந்த
தொழில்
மொழி
படித்தால்
வேலை
எனின்
அதனை
தொடர்ந்தே
உலகம்
பயணிக்கும்.
இனி
மெல்ல
தமிழ்
சாகும்
என்ற
பாரதி
பைத்தியமல்ல.
தேம்ஸ்
நதியையும்
கங்கையிலும்
கவிதை
விதைத்தவன்.
மொழிகள்
தங்கள்
உக்கிரங்களை
வக்கிரங்களை
தனிக் கட்டும்.
நல்ல
வார்த்தைகளே!
உண்டான
ஓர்
மொழி
வெள்ளமென
மானிடர்
உள்ளமதில்
பரவட்டும்.
அறத்தின்
ஒழுக்கத்தின்
கற்பின்
பிடியில்
மொழிகள்
கரைந்து
மனிதநேயம்
பிறக்கட்டும்.
மொழிகள்
அதன்
பாவங்கள்
அதன்
இரத்தகறைகள்
இன படுகொலைகள்
பாதகங்கள்
பழிகள்
இவற்றிலிருந்து
விடுபடட்டும்.
ஆணவம்
செருக்கு
அகந்தை
வெறி
நீங்கிய
மொழிகள்
உலகை
வெல்லட்டும்.
கேலோமி🌹🌹
மேட்டூர் அணை
9842131985