நிலவு மறைவதற்கு முன் இது நடக்கிறது..!
❓❓❓❓❓❓❓❓❓❓❓ *என்ன செய்யப்* *போகிறாய்?* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்
❓❓❓❓❓❓❓❓❓❓❓
🌸பூக்கள்
உதிர்வதற்குள்
மணம் வீசி விடுகிறது…
🌙நிலவு
மறைவதற்குள்
கவிதையைக்
கொடுத்துவிடுகிறது….
🌧️மழை நிற்பதற்குள்
குளிர்ச்சியை
அளித்து விடுகிறது….
🌈வானவில்
மறைவதற்குள்
மகிழ்ச்சியை
நிறைத்து விடுகிறது…..
🌳மரம் விழுவதற்குள்
காய் கனி நிழல்
தந்து விடுகிறது….
💧ஆறு கடப்பதற்குள்
வளத்தை
கொடுத்து விடுகிறது…
👤மனிதனே !
நீ இறப்பதற்குள்
என்ன செய்யப் போகிறாய்….? *கவிதை ரசிகன்*
❓❓❓❓❓❓❓❓❓❓❓