இவர் ஓர் பாற்கடல்..!
கவிஞர் வாலி
ரங்கராஜ சீனிவாசன் இவர்கொண்ட இயற்பெயராம்!
ராஜாங்கம் அமைத்துயர்ந்த வாலியெனும் உயர்க்கவியாம்!
சங்ககால அமிர்தமெல்லாம் கடைந்தளித்தப்
பாற்கடலாம்!
சாமான்யன் கேட்டாலும் புரிந்துகொள்ளும் சொற்சுவையாம்!
மங்காத திறனாலே மறைபோல வரிநயமாம்!
மாமலையை உருக்கிவிடும் மந்தாரப் பாட்டரசாம்!
பாண்டவரின் பூமியாலே பலர்மனதில் கூடலானார்!
பாமரரும் முணுமுணுக்கும் பாடல்கள் ஏடலானார்!
தூண்டுகின்ற உணர்ச்சிகளைத் துலக்கிவிட்டுத் தேடலானார்
தாமமைத்தச் சந்தத்தால் சதிராடிப் பாடலானார்
*~”செம்மைக் கவிஞர்’ டாக்டர் சோமதேவன் சோமசன்மா ,ஜொகூர்,மலேசியா