பதிவுகள்

மொரட்டுவ கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு

மொரட்டுவ பொலிஸ் பிரிவின் உஸ்வத்த பிரதேசத்திற்குட்பட்ட கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்க அமைவாக குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் திடீர் மரண விசாரணை அதிகாரி பார்வையிட்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *