என் டயரி..!
என் டைரி
“””””””””””””””””””””””””””””””
என் வரிகளை திருடுகிறார்கள்
வலிக்கவில்லை எனக்கு….
என் பிள்ளைக்கு இவர்கள் பெயர் வைக்கிறார்கள்….
பொருளறிந்து யாரும் பெயர் சூட்டுவதில்லை… பொருள் அறியும் கருத்தாழம் கொண்டவன் பிறர் பொருள் களவாடுவதில்லை
.திறன் அற்ற பொருளை யாரும் திருடுவதில்லை …
மரபணு உயிரற்றவர்கள் மட்டும் தான் கருத்தரிப்பு மையத்தை நாட வேண்டும்..
கையாலாகாதவன் மட்டும் தான் பிறர் கைபிடித்து நடக்க வேண்டும்….
காலூன்ற இயலாதவன் தான் ஊன்றுகோளை தேட வேண்டும்
வித்தின் வீரியம் இல்லாதவனே
விலை பொருள் ஆகிறான்
திரட்டு கவிஞன் அல்ல பிறர் வரியை திருடி திரட்டி சொல்ல...
புரட்டுக் கவிஞனல்ல..புராண கதைகளை கொண்டு உருட்டி செல்ல
சங்கப் பாடல்களை கொண்டு இங்கு பாடல் வடிக்கும் சகதி புலவன் அல்ல…
களவாடும் அளவிற்கு கருத்துள்ளது
களவாடக் குறையாத கருவூலம் அது
ஏதுமில்லை சொந்தம் இங்கே உண்மையாகும்.. என் கவியின் சந்தங்களும் பிரபஞ்சமாகும்..

களவாடுவது குற்றம் என கண்டுணர்வீர்..
“கரை சேர வேண்டி நான் கைவிரல் நீட்டினேன் என் கைவிரல் மோதிரம் களவு போனதே…”
கை கொடுத்து தூக்காவிட்டாலும் பரவாயில்லை கை பொருளை களவாடாதீர்கள்…..
உள்ளுணர்வுகள் மட்டுமே ஒவ்வொரு கவிஞனையும் உருவாக்குகிறது….
வாய்விட்டு நான் உதித்த வார்த்தைகளை மட்டுமே நீ வளைத்து போட முடியும்….
உதிர்காத வார்த்தைகள் ஏராளம்
உருக்குலைக்க முடியாது எந்நாளும்…
நானே அறியேன் இதுகாறும்
நண்பா
என் டைரி
திருடாதே
ஒரு நாளும்..
முனைவர் :
தமிழ் ஆர்வலர்
கவித்தேடல்
மு.மொய்தீன்
(வடசென்னை)
3-4-2025-
