ஏழு மாதங்களுக்குப் பிறகு இத்தாலியில் முதல் முறையாக மிகக் குறைந்த கொரோனா இறப்புக்களை.
கடந்த ஒக்டோபர் மாதம் 14 ம் திகதி 24 மணித்தியாலங்களில் 43 பேர் இத்தாலியில் கொரோனாத்தொற்றுக்களால் இறந்தார்கள். அதன் பின்னர் அந்த நாட்டில் இறப்புக்க்கள் அதிகரித்துக்கொண்டேயிருந்தன. 126,000 க்கும் அதிகமானோர் அவ்வியாதியால் இறந்தபின் முதல் தடவையாக ஒரு நாளில் இறந்தவர்களின் இலக்கம் 44 ஆக இறங்கியிருக்கிறது.
தடுப்பூசிகள் இரண்டையும் இதுவரை நாட்டின் 20 % மக்களுக்கு இத்தாலி கொடுத்திருக்கிறது. நாட்டில் மொத்தமாக 34.2 மில்லியன் தடுப்பூசிகள் இதுவரை கொடுக்கப்பட்டிருக்கின்றன.
நாட்டின் மூன்று மாகாணங்கள் திங்களன்று முதல் தமது கொரோனாக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டன. மேலும் மூன்று மாகாணங்களில் கட்டுப்பாடுகள் இவ்வார இறுதியில் விடுவிக்கப்படும் என்று இத்தாலிய அரசு அறிவித்திருக்கிறது. கட்டுபாடுகளிலிருந்து விடுவிக்கப்படும் மாகாணங்கள் திட்டமிட்டதை விட முன்னதாகவே தமது கட்டடங்களுக்குள் உணவுச்சாலைகளை, தவறணைகளைத் திறக்கலாம். கேளிக்கை நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள் போன்றவையும் அனுமதிக்கப்படும்.
கட்டுப்பாடுகள் விடுவிக்கப்பட்ட மாகாணங்களில் தொடர்ந்தும், இரவுக் கேளிக்கைகள், டிஸ்கோ நடனசாலைகள் தொடர்ந்தும் மூடியிருக்கும். அத்துடன் பொது இடங்களில் முகக்கவசமணிதலும், சமூக விலகலும் அமுலிலிருக்கும்.
சாள்ஸ் ஜெ. போமன்