விடுமுறைக்கு வீடு சென்று விசா புதுப்பிக்காதவர்கள் மீண்டும் சவூதிக்குள் 3 வருடங்களுக்கு நுழைய முடியாது.
கொவிட் 19 பரவலின்போது மீள் விசா பெற்றுக்கொண்டு தமது நாடுகளுக்குச் சென்றிருந்தவர்கள் அதே விசாவில் சவூதிக்குத் திரும்பிவராவிடில் அவர்களுக்கு அதன் பின்னான மூன்று வருடங்கள் சவூதி அரேபியாவுக்கு வரத் தடை விதிக்கப்படும் என்று அந்த நாடு அறிவித்திருக்கிறது.
குறிப்பிட்ட ஒரு நபரின் விசாவின் கீழ் சவூதியில் வேலை செய்பவர்கள் தமது நாட்டுக்குத் திரும்பியிருப்பின் மீண்டும் வருவதானால் அதே நபரின் கீழ் வேலை செய்வதாக விசாவைப் புதுப்பித்துக்கொள்ளவேண்டும் என்பதை வற்புறுத்துவதே சவூதி அரேபிய அரசின் நோக்கம் என்று குறிப்பிடப்படுகிறது. நாட்டுக்குச் சென்றவர்கள் கொவிட் 19 கட்டுப்பாடுகளால் குறிப்பிட்டபடி சவூதி அரேபியாவுக்குத் திரும்பி வரமுடியாவிட்டால் அவர்களுடைய விசாக்களை நவம்பர் 30 வரை நீட்டித்துக்கொள்ளலாம்.
இணையத்தளத்தில் அவர்கள் தமது விசா நீட்டிப்புச் செய்யலாமே தவிர தாம் நாட்டைவிட்டுப் போனதான Exit விசா பெற்றுக்கொண்டு வேறொரு சவூதி அரேபியரின் கீழே வேலை செய்ய 3 வருடங்களுக்குத் திரும்பிவரமுடியாது.
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்த பலர் சவூதி அரேபியாவிலிருந்து நாட்டுக்குத் திரும்பியபின் மீண்டும் திரும்பிப் போகாமல், விசா புதுப்பிப்புச் செய்யாமலிருக்கிறார்கள். அதை அவர்கள் குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் செய்யாவிடில் அவர்கள் தமது சவூதி அரேபிய வேலைக்குத் திரும்பிச் செல்லுதல் கேள்விக்குறியானதாகிவிடும்.
சாள்ஸ் ஜெ. போமன்