சீனாவில் தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை இறக்குமதி செய்வதைத் தடை செய்தது சிறீலங்கா.

விவசாயத்துக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய கிருமிகள் இரண்டாவது தடவையும் காணப்பட்டதால் சீனாவிலிருந்து கொள்வனவு செய்யப்படும் இயற்கை உரங்களை [organic fertilisers] சிறீலங்கா தடை செய்தது. நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்புக் கருதி இவ்வருட ஆரம்பத்தில் இரசாயண உரங்களைத் தடை செய்தது சிறீலங்கா. இயற்கை உரங்களை மட்டுமே விவசாயத்தில் பாவிப்பதென்று முடிவெடுக்கப்பட்டது.


சிறீலங்காவின் விவசாய அமைப்பு நிர்வாக அஜந்த சில்வாவின் வேண்டுகோடுக்கு இணங்கியே அரசு சீனாவிலிருந்து இயற்கை உரங்களை இறக்குமதி செய்வதைத் தடை செய்தது. “விவசாயத்துக்குப் பாதிப்பை உண்டாக்கும் கிருமிகளை நாட்டுக்குள் கொண்டுவரும் சீனாவின் இயற்கை உரங்களை உள்ளே வர இனி அனுமதிக்க மாட்டேன்,” என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

செப்டெம்பர் 17 திகதியன்று சிறீலங்காவின் விவசாயப் பரிசோதகர்கள் எர்வீனியா என்றழைக்கப்படும் நுண்ணிய கிருமியைச் சீனாவிலிருந்து Qingdao Seawin Biotech Group Co Ltd. என்ற பெயருடைய நிறுவனத்தின் இயற்கை உரத்தில் கண்டு பிடித்தனர். அதை உறுதிசெய்ய மீண்டுமொருமுறை அவ்வுரத்தின் மாதிரிகள் கொண்டுவரப்பட்டுப் பரிசீலனை செய்யப்பட்டபோது அக்கிருமியை மீண்டும் காணக்கூடியதாக இருந்ததை அடுத்தே சீனாவின் உரங்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *