வலுவிழந்த இஸ்ரேல் அமைச்சரிடம் மன்னிப்புக் கேட்ட பிரிட்டிஷ் பிரதமர்.
சக்கர நாற்காலியுடன் மாநாட்டுக்குவந்தவர் போக வழியின்றி ஏமாற்றம்.
இஸ்ரேல் நாட்டின் எரிசக்தி அமைச்சரா கப் பதவி வகிப்பவர் கரீன் எல்ஹார்ரர் (Karine Elharrar) என்ற பெண் ஆவார்.தசை நார்வுத் தேய்வினால் (muscular dystrophy) பாதிக்கப்பட்டு வலுவிழந்தவர்.கிளாஸ்கோவில் நடைபெறுகின்ற பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சக்கர நாற்காலியில் வருகை தந்த அவர் நீண்ட நேரம் காத்திருந்தும் மாநாட்டு மண்டபத்தினுள் செல்ல முடியவில்லை.
வலுவிழந்தவர்கள் சக்கர நாற்காலியுடன்மண்டபத்திற்குள் செல்லக் கூடிய வசதி களை மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் செய்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இஸ்ரேலின் சார்பில் வருகை தந்த அந்தப் பெண் அமைச்சர் கடந்த திங்களன்று இஸ்ரேலியப் பிரதமருடன் இணைந்து மாநாட்டின் ஆரம்ப நாள் நிகழ்வுகளில் பங்குகொள்ள முடியாமற் போனது.அது குறித்து அவர் தனது ருவீற்றர் தளத்தில் வலுவிழந்தோருக்குஐ. நா. வசதி செய்யத் தவறியமைக்குவருந்துவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
மண்டபத்துக்கு வெளியே இரண்டு மணிநேரம் காத்திருந்து விட்டு 50 மைல்கள்தொலைவில் உள்ள தனது விடுதிக்குஅவர் திரும்பிச் செல்ல நேர்ந்தது. எனினும் மாநாட்டின் நேற்றைய நிகழ்வுகளில் அவர் பங்குபற்றுவதற்கு விசேட வசதிகள் செய்யப்பட்டன.வலுவிழந்த அமைச்சருக்கு நேர்ந்த இந்தச் சம்பவத்துக்காக பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அவரிடம் நேரடியாக மன்னிப்புக் கோரியுள்ளார்.பிரிட்டிஷ் சுற்றுச் சூழல் அமைச்சரும் இந்தச் சம்பவம் குறித்து வருத்தத்தையும் மன்னிப்பையும் வெளியிட்டிருக்கிறார்.
மாநாட்டு மண்டப வாயில்களில் சக்கரநாற்காலிகள் செல்லக்கூடியவாறானவசதிகள் செய்யப் படாமையால் நேர்ந்தஇந்தச் சம்பவம் தங்களது எதிர்காலமாநாடுகளை ஏற்பாடு செய்வதில் ஒருஅனுபவப் பாடமாக அமைந்து விட்டதுஎன்று பிரிட்டிஷ் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
குமாரதாஸன். பாரிஸ்.