ஹொலிவூட் சினிமா உலகம் மீண்டும் படப்பிடிப்புக்களை ஆரம்பிக்கிறது.

நத்தார், புதுவருடக் காலகட்டத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் படு வேகமாகப் பரவிவந்த கொவிட் 19 காரணமாகச் சகல சினிமா, தொலைக்காட்சித் தயாரிப்புக்களையும் நிறுத்திவைக்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டார்கள். இதுவரை ஓய்விலிருந்த அந்தப் பொழுதுபோக்கு உலகம் மீண்டும் படப்பிடிப்புக்களை ஆரம்பிக்கப்போகிறது.

பெரிய சினிமாத் தயாரிப்புக்கள், நேரடி ஒளிபரப்பிலீடுபடும் நெட்பிளிக்ஸ் போன்ற நிறுவனங்களும் தமது படப்பிடிப்புக்களை ஆரம்பிக்கும் இதே சமயத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவசாலைகள் நிரம்பி வழிகின்றன, கொவிட் 19 நோயாளிகளால். கடந்த இரண்டு வாரங்களாகத் தினசரி இறப்பு 200 ஆக இருப்பதால் எத்தனை உடல்களை எரிக்கலாம் என்பதற்கும் கூட அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விரித்திருக்கிறார்கள்.

இதனால் சுமார் 160,000 சினிமாத் தொழிலாளர்களை அங்கத்துவராகக் கொண்டிருக்கும் சினிமாத் தொழிலாளர் சங்கம் “மீண்டும் படப்பிடிப்புக்களைத் தொடங்குவதற்கு இது சரியான நேரமல்ல,” என்று அறிக்கை விட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *