மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவை தமிழுலகம் இழந்துவிட்டது

ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரும், பதிப்பாளருமாக விளங்கிய மல்லிகை இதழாசிரியர் டொமினிக் ஜீவா இன்று 28.01.2021 மாலை காலமானார் இலங்கையில் காலமானார். அவரின் 94 வது வயதில் தமிழுலகத்தை விட்டு நீங்கியுள்ளார். யாழ்ப்பாணத்தில் பிறந்து தமிழுலமெங்கும் தமிழிலக்கியத்துறையில் தன் தனிமுத்திரையை பதித்து தமிழுக்காக வாழ்ந்தவர்களில் ஒருவராவார்.

இலங்கையின் மிகப்பிரபல்யமான சாகித்திய மண்டலப்பரிசை இரண்டு தடவைகள் பெற்றவராவார்.60 களின் ஆரம்பங்களில் இவர் எழுதிய தண்ணீரும் கண்ணீரும் மற்றும் பாதுகை ஆகிய பதிப்புகளுக்கு அந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

1966 இலிருந்து இவர் வெளியிட்டு வந்த மல்லிகை சஞ்சிகை மக்கள் மத்தியில் மிகப்பிரபல்யம் வாய்ந்ததாகும்.இவரின் சிந்தனைகள் வலுமிக்கதாக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட்டவையாக உணரப்படுபவை ஆகும்.

இவர் பற்றிய பல ஆய்வு நூல்கள் இவரின் தனித்திறமையை என்றும் பறைசாற்றுபவையாக விளங்குகின்றன.

இப்படியாயான தனிப்பெரும் எழுத்தாளரை இன்று தமிழுலகம் இழந்து தவிக்கிறது. இவரின் இழப்பினால் உலகமெங்கும் வாழும் தமிழ்மொழி ஆர்வலர்கள் தங்கள் அஞ்சலிகளை பகிர்ந்த வண்ணம் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிநடை இணையம் ,வெற்றிநடை நேரலை ஆகியனவும் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களின் இழப்பினால் ஆழ்ந்த துயரங்களை பதிவு செய்துகொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *