மியான்மாரின் பிரதமர், ஜனாதிபதிக்கெதிராகக் குற்றங்கள் சாட்டப்பட்டு, ஆதாரங்கள் தேடப்பட்டு, விசாரணைகள் நடக்கவிருக்கின்றன – மியன்மார் இராணுவம்.
மியான்மார் இராணுவத்தால் கவிழ்க்கப்பட்ட பிரதமர் அவுன் சன் ஸு ஷி வீட்டிலிருந்து அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டு அவரை விசாரணைக்காக பெப்ரவரி 15 வரை தடுப்புக் காவலில் வைத்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
மியான்மார் அரச கட்டுப்பாடுகளுக்கு எதிராக அவர் குறிப்பிட்ட பொருட்களை வெளிநாட்டிலிருந்து வரவழைத்து வெளிநாடுகளுடன் இரகசியமாகத் தொடர்புகளை வைத்திருந்திருக்கலாமென்று சந்தேகிக்கப்படுவதாக அறிக்கை குறிப்பிடுகிறது. நாட்டின் ஜனாதிபதியாக இருந்த 69 வயதான வின் மியிந்த் நாட்டு மக்களைக் கொரோனாக் கிருமிகளிலிருந்து காப்பாற்றத் தவறிவிட்டாரென்று குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.
அவுன் சன் ஸு ஷி மேலுள்ள குற்றச்சாட்டுக்களுக்காக அவரை மூன்று வருடங்களும், நாட்டு மக்களைக் காப்பாற்ற தவறிய ஜனாதிபதியின் தவறுக்காக அவரை ஏழு வருடங்களும் சிறைக்கனுப்பலாம் என்று தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்