வளைகுடாப் பிராந்தியத்திலிருந்து அமெரிக்க போர் விமானந்தாங்கிக் கப்பல் திரும்புகிறது.
ஈரானுக்கும், டிரம்ப்பின் அதிகாரத்துக்கும் கடைசி நாட்களில் ஏற்பட்ட வாய்ச்சண்டைகளால் ஈரானுக்கு அருகே கடல் பிராந்தியத்தினுள் அனுப்பப்பட்டிருந்த அமெரிக்காவின் விமானந்தாங்கிக் கப்பல் வேறொரு பிராந்தியத்தை நோக்கித் திரும்புவதாக ஜோ பைடன் நிர்வாகம் அறிவிக்கிறது.
“முன்பிருந்த அதிகாரத்தைப் போல இலகுவான முடிவுகளை நாங்கள் எடுக்கப்போவதில்லை. தற்போதைய நிலையில் USS Nimitz போர்க்கப்பல் அமெரிக்காவின் பாதுகாப்புக்காக அப்பிராந்தியத்தில் அவசியமில்லை. “ என்று தெரிவித்த பெந்தகன் அதிகாரி ஜோன் கிர்பி, மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் நிலைமையில் ஏதாவது மாற்றங்கள் இருக்கிறதா போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்