ஈரானியப் பத்திரிகையாளர், ருஹுல்லா ஸம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

2017 ம் ஆண்டு ஈரானிய அரசுக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழுவதற்கான முக்கிய காரணமாக இருந்த ருஹுல்லா ஸம்முக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை டிசம்பர் 12 இல் நிறைவேற்றப்பட்டதாக ஈரானிய அரச ஊடகம் அறிவித்தது.

ஈரானில் மனித உரிமைகள் வேண்டிக் குரல் கொடுத்த ருஹுல்லா ஸம் தனது நாட்டில் சுதந்திரமாக இயங்க முடியாததால் பிரான்ஸுக்குச் சென்று வாழ்ந்தார். அங்கிருந்து 2017 இல் நாட்டுக்கு இரகசியமாகத் திரும்பிய இவர் ஈரானிய அரசால் கைது செய்யப்பட்டார்.

“Amadnews” என்ற செய்தித் தளத்தை இயக்கி அதன் மூலம் ஈரானிய மக்களிடையே கருத்துரிமைக்கான விழிப்புணர்வை உண்டாக்கினார். 2017 இல் ஈரானிய அரசு நாட்டின் உணவுப்பொருட்களின் விலையை உயர்த்தியபோது அங்கே எழுந்த மிகப்பெரிய மக்கள் கிளர்ச்சிக்கு ருஹுல்லா ஸம் காரணமாக இருந்தவர். 

கிளர்ச்சியில் ஈடுபட்ட பல நூறு பேரைக் கொலை செய்து, ஆயிரக்கணக்கானோரைக் கைது செய்து இரும்புக்கரம் கொண்டு அந்தக் கிளர்ச்சியும் அடக்கப்பட்டது. “வாழும் பூமிக்கு ஊழல் செய்தவர்” என்று ஈரானிய இஸ்லாமியச் சட்டங்களுக்கெதிராகக் குரல் கொடுப்பவர்களுக்குக் கொடுக்கும் பெயரே ருஹுல்லா ஸம்முக்கும் கொடுக்கப்பட்டது.

அந்தக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களைச் சித்திரவதை செய்து விசாரிப்பது போலவே ருஹுல்லா ஸம்மும் நடாத்தப்பட்டு அவர் மீது மரண தண்டனை வளங்கப்பட்டது. பல நாடுகளும்,  மனித உரிமைப்புக்களும் எதிர்ப்புக் குரல் கொடுத்தும் இவ்வருட ஆரம்பத்தில் 47 வயதான ருஹுல்லா ஸ்ம்முக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *