அவசரகால நடவடிக்கையாக கொவிட் 19 தடுப்பு மருந்தை அமெரிக்கா பாவிக்க அனுமதிக்கிறது.

அமெரிக்காவின் உணவு, மருந்து பாவிப்புக்கான அனுமதி வழங்கும் அதிகாரம் [The US Food and Drug Adminstration] 11.12 வெள்ளியன்று Pfizer-BioNTech நிறுவனத்தின் கொவிட் 19 தடுப்பு மருந்தை நாட்டில் பாவிக்கும் அனுமதியை வழங்கியதாக அறிவிக்கிறது. இதன் மூலம் அமெரிக்கச் சரித்திரத்தின் மிகவும் பெரிய தடுப்பு மருந்து விநியோகம் ஆரம்பிக்கவிருக்கிறது.

“பதினொரு மாதங்களுக்கு முன்னர் எந்த ஒரு விஞ்ஞானியாலும் இப்படியொரு வெற்றியையும் எதிர்பார்த்திருக்க முடியாது,” என்று FDA இன் மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

தடுப்பு மருந்தைப் பாவனைக்கு அனுபவித்த மற்றைய நாடுகளைப் போலவே அமெரிக்காவிலும் வயதானவர், பலவீனமானவர்கள், கொவிட் 19 மருத்துவ சேவையிலுள்ளவர்களுக்கு இம்மருந்து முதலில் வழங்கப்படும். வரவிருக்கும் வாரத்தில் Moderna நிறுவனத்தின் மருந்தும் பாவனைக்குக் கொண்டுவரப்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக FDA அறிவித்திருக்கிறது.

தற்போதைய நிலைமையில் Pfizer-BioNTech நிறுவனத்தின் மருந்து தேவையான நாடுகளுக்கெல்லாம் தேவையான அளவில் தயாரிக்கப்படவில்லை. எனவே அமெரிக்காவின் பொதுமக்களுக்கு தேவைக்கேற்றபடி இந்த மருந்து எட்ட மேலும் ஒரு சில மாதங்களாகலாம் என்று தெரியவருகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *