1988 க்குப் பின்னர் முதல் தடவையாக உலகின் இராணுவச் செலவுகள் மிகப்பெருமளவில் அதிகரித்திருக்கின்றன.

உலகின் ஒட்டுமொத்தப்  பொருளாதாரத் தயாரிப்பில் 2.4 % இராணுவச் செலவுகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. 2020 ம் ஆண்டு கொரோனாத் தொற்றுக்கள் உலகைக் கவ்விப்பிடித்திருந்த சமயத்தில் 1988 ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக மிகப்பெருமளவில் இராணுவத்துக்காகச் செலவழிக்கப்பட்டிருக்கிறது. அதன் மொத்தப் பெறுமதி 2 பில்லியன் டொலர்களாகும். 

2019 ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது உலக நாடுகளின் இராணுவச் செலவுகள் 2020 இல் 2.6% ஆல் அதிகரித்திருக்கின்றன. எவருக்கும் ஆச்சரியமின்றி அமெரிக்காவே உலகின் மிகப்பெரிய இராணுவச் செலவாளியாகவும் இருக்கிறது. உலக இராணுவச் செலவுகளின் 39 % அமெரிக்காவுடையதாகும். அது டொனால்ட் டிரம்ப்பின் கடைசி ஆட்சி வருடத்தில் 4 விகிதத்தால் அதிகரித்திருக்கிறது. 

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவர்களே அடுத்தடுத்த இடங்களிலும் வருகிறார்கள். சீனா, இந்தியா, ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை அவைகளையடுத்து வருகின்றன. மூன்றாவது இடத்திலிருக்கும் சீனா 73 பில்லியன் டொலர்களை இராணுவத்துக்காகச் செலவுசெய்திருக்கிறது. அதற்கு முன்னைய வருடத்தைவிட 30 % அதிகமாக அது செலவுசெய்திருக்கிறது. சீனாவோ தனது இராணுவச் செலவை 2011 உடன் ஒப்பிடும்போது 75 % ஆல் அதிகமாக்கியிருக்கிறது. 

நோர்வே, சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகளும் கடந்த வருடத்தில் தமது இராணுவச் செலவை முறையே, 37, 34, 24 விகிதங்களால் அதிகரித்திருக்கிறார்கள். 

ஆபிரிக்க நாடுகளான உகண்டா, சாட், நைஜீரியா, மொரொக்கோ ஆகிய நாடுகளும் கடந்த வருடத்தில் மிகப்பெரிய அளவில் தமது இராணுவச் செலவை அதிகரித்திருக்கின்றன. மியான்மார் தனது இராணுவச் செலவை 41 % ஆல் அதிகரித்தது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *