இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தின் விவசாயிகளும் டெல்லியில் போராட்டத்தில் இணைய ஆரம்பிக்கிறார்கள்.
இந்திய மத்திய அரசின் விவசாயத் துறை சம்பந்தமான மூன்று சட்டங்களை வாபஸ் வாங்கும்படி போராடியதில் இதுவரை வடக்கு மா நிலங்களான பஞ்சாப், ஹரியானா போன்றவைகளிலிருந்தே பெரும்பாலான விவசாயிகள் பங்குபற்றியிருந்தார்கள். உத்தர் பிரதேசத்து விவசாயிகளும் போராட்டங்களுக்குக் கைகொடுக்க டெல்லி எல்லைக்குப் போகிறார்கள்.
மோடியின் எதிர்க்கட்சியின் ஆட்சியிலிருக்கும் பஞ்சாப்பிலிருந்து தானியங்களை விளைவிக்கும் விவசாயிகளுடன், பாஜக-வின் ஆட்சி பலமாக இருக்கும் உத்தர்பிரதேச விவசாயிகளும் ஆயிரக்கணக்கில் குவிந்துகொண்டிருப்பது மோடிக்குப் புதிய ஒரு சவாலாக முளைத்திருக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரும் மாநிலமான உத்தர்பிரதேசம் பாஜக-வின் இந்து மதத் தேசியத்தின் மையம் என்றும் குறிப்பிடக்கூடிய மோடியின் முக்கிய போர்க்களமாகும். அவர்கள் ஏற்கனவே வட இந்திய சீக்கிய, இஸ்லாமிய விவசாயிகளுடன் கைகோர்த்து டெல்லிக்குள் நுழைய முற்படும் சமயத்தில் மத்திய அரசு எல்லைகளைக் கடுமையான காவலுக்குள் கொண்டுவந்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்