பிரெக்ஸிட் என்ற கத்தரிக்கோலுக்குள்ளே மாட்டிக்கொண்டு தவிக்கும் வட அயர்லாந்து.
பிரிட்டனும், ஐரோப்பிய ஒன்றியமும் தன் தன் வழியில் போக ஆரம்பித்தபின்பு பிரிட்டனுக்கு அருகே இருந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாகமாகத் தொடரும் அயர்லாந்து ஒரு பிரத்தியேக நிலைப்பாட்டைப் பெற்றிருக்கிறது. அதன் விளைவாக அந்த நாட்டு அரசியலுக்குள் புதிய குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.
அது ஐரோப்பிய ஒன்றியத்தினுள் அங்கமாக இருப்பதால் பிரிட்டனிலிருந்து வட அயர்லாந்துக்குள் கொண்டுவரப்படும் பொருட்கள் எல்லையில் சோதனை செய்யப்படுகின்றன. அதனால் வட அயர்லாந்துக்கு வரவேண்டிய பொருட்களைக் காலதாமதம் செய்ய அது நாட்டின் அரசியல்வாதிகளிடையே கோபத்தைக் கொப்பளிக்க வைத்திருக்கிறது.
தாம் பிரிட்டர்களாக இருந்தும் தமக்குப் பிரிட்டிஷ் பொருட்கள் கிடைப்பது தாமதமாவது பலரை எரிச்சலடைய வைத்திருக்கிறது. பிரெக்ஸிட்டின் ஆரம்ப நாட்களில் சுங்க எல்லையின் ஊடாக வரும் பிரிட்டிஷ் பொருட்களைக் கண்காணிப்பது நிறுத்தப்பட்டது, காரணம் எல்லைக் காவலர்கள் மீது மிரட்டல்கள் நடாத்தப்பட்டன. பெரும்பாலான பொருட்களைப் பிரிட்டனிலிருந்து பெற்று வந்ததால் திடீரென்று பல பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
ஒரு பகுதியினர் வட அயர்லாந்தில் பிரிட்டனைச் சேரவேண்டுமென்று குரலெழுப்ப இன்னொரு பகுதியினர் வட அயர்லாந்து அயர்லாந்துடன் சேர்ந்து ஒரு நாடாகவேண்டும் என்று விரும்புகின்றனர். நீண்ட காலமாகவே அயர்லாந்தின் கத்தோலிக்கர்களுக்கும், பிரிட்டிஷ் அரசுக்கும் உண்டாகியிருந்த ஆழமான பிளவுகளின் எதிரொலி மீண்டும் உண்டாகிறா என்ற சந்தேகம் உருவாகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்