மர்மமான வகையில் சிலே கடற்கரையொன்றில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் கரையில் இறந்துபோயிருந்தன.
சிலே நாட்டின் பியோபியோ பிராந்தியத்திலிருக்கும் ஹொர்கூனெஸ் கடற்கரை பல்லாயிரக்கணக்கான இறந்துபோன மீன்களால் மறைந்திருந்ததன் காரணம் என்னவாக இருக்கலாமென்று பலரும் யோசிக்கிறார்கள்.
அப்பட்குதிக் கடல் நீரில் வெம்மை மாறுதல் ஏற்பட்டு அது இருக்கலாமா என்று சிலேயின் மீன்பிடி அமைச்சு ஆராய்ச்சி செய்து வருகிறது.
மீன்கள் தவிர நண்டுகளும் இறந்துபோயிருந்தன. chlorophyll என்ற பெயருள்ள கிருமியொன்று அப்பகுதி நீரில் இருந்ததைக் காணமுடிவதாகவும், அந்தக் கிருமி நீரிலுள்ள பிராணவாயுவை உறிஞ்சிவிடுவதால் மற்றைய நீர்வாழும் விலங்குகள் சுவாசிக்க முடியாமல் இறந்து போயிருக்கலாமென்றும் சந்தேகிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்