சர்ச்சைக்குரிய பிரபல, பத்திரிகை வெளியீட்டாளராக இருந்த லரி பிளிண்ட் மரணமடைந்தார்.

“ஹஸ்ட்லர்” என்ற பெயரில் சஞ்சிகைகள், தொலைக்காட்சிப் படங்கள் போன்றவைகளை வெளியிட்டு உலகப் புகழ் பெற்றவர் லரி பிளிண்ட். இவரது பெயரும் ஹஸ்ட்லர் என்ற பெயரும் இணையத் தளங்கள் பிரபலமாக முன்னர் நிர்வாண, பாலுறவுப் படங்களுக்குப் புகழ் பெற்றவையாக இருந்தன.

தனது நடத்தைகள், கருத்துக்களால் பெரும் சர்ச்சைச் சூறாவளிகளுக்கு மையமாகப் பெரும்பாலும் இருந்த அவரைப் பற்றி ஒரு சினிமாவும் The People Vs Larry Flynt என்ற பெயரில் எடுக்கப்பட்டது. அந்தச் சினிமா ஆஸ்கார் பரிசுக்காகப் பிரேரிக்கப்பட்டதுமாகும்.

ஜோசப் போல் பிராங்க்லின் என்ற வெள்ளை நிறவாதி, கொலைகாரனால் லரி பிளிண்ட் 1978 இல் கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டார். அந்தத் துப்பாக்கிச் சூட்டால் முதுகுத் தண்டு பாதிக்கப்பட்டு மிச்ச வாழ்நாள் முழுவதும் இடுப்புக்குக் கீழே செயற்பாடின்றிப், பெரும் வேதனையுடன் வாழ்ந்த லரி பிளிண்ட் தனது 78 வயதில் புதனன்று லாஸ் ஏஞ்சல்ஸில் மரணமடைந்தார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *