எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி இறங்கியதாகக் கதை விட்ட மூன்று இந்தியர்களை ஆறு வருடங்களுக்குத் தடை செய்திருக்கிறது நேபாளம்.
சீமா ராணி கோஸ்வாமி, நரேந்திர சிங் யாதவ் ஆகிய இருவரும் 2016 இல் எவரெஸ்ட் சிகரத்தை முழுவதுமாக ஏறி இறங்கியதாகப் பொய்ச் சான்றிதழ் கொடுத்த அவர்களது குழுத் தலைவரையும் அவர்களிருவரையும் நேபாளம் ஆறு வருடங்களுக்கு எவ்வித மலையேற்றங்களிலும் ஈடுபடத் தடை விதித்திருக்கிறது.
அந்த இருவரையும் எவரெஸ்ட் சிகரத்துக்குக் கூட்டிச் சென்றதாகக் குறிப்பிட்டுச் சான்றிதழ் கொடுத்த மலையேறும் குழுத் தலைவர் நபா குமார் புகொன்னுக்கும் ஆறு வருடத்துக்கு அப்பிராந்தியத்தில் மலைகளிலேறத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அவரைத் தவிர அந்தத் தில்லுமுல்லில் பங்குபற்றி ஆமோதித்துக் கையெழுத்திட்ட வேறு சிலருக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
தினேஷ், தாரகேஸ்வரி ரத்தோட் என்ற இன்னொரு தம்பதியினரும் அதே குழுவில் பங்குபற்றி எவரெஸ்ட்டில் ஏறியதாக இந்திய சுற்றுலா அமைப்பின் பொய்ச் சான்றிதழ்களைப் பெற்றிருந்தார்கள். அவர்களுடைய சான்றிதழ்களும் விசாரணைக்குப் பின்னர் பறிக்கப்பட்டன.
சாள்ஸ் ஜெ. போமன்