ஏற்கனவே கொவிட் 19 ஆல் தொற்றப்பட்டவர்களுக்கு ஒரு ஊசி மட்டுமே போதுமென்கிறது பிரான்ஸ்.
ஐரோப்பிய ஒன்றியத்தினுள் பாவிக்கப்படும் தடுப்பு மருந்துகளின் இரண்டு தடுப்பூசிகள் பெற்றவர்கள் பலமான கொரோனா எதிர்ப்புச் சக்தியைப் பெற்றிருப்பதாக ஆராய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால், ஏற்கனவே நோயிலிருந்து குணமானவர்களுக்கு ஒற்றைத் தடுப்பூசி மட்டுமே போதுமென்ற அறிவுறுத்தலைப் பிரான்ஸ் தனது நாட்டின் மருத்துவ சேவைக்குக் கொடுத்திருக்கிறது.
இதுவரை 2.1 மில்லியன் பிரென்சுக்காரர்களுக்கு ஒரு தடுப்பூசியும், சுமார் 535,800 பேருக்கு இரண்டு தடுப்பூசிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே கொவிட் 19 பெற்ற ஒருவருக்குக் கொடுக்கப்படும் ஒரு தடுப்பூசியே அந்த நபரின் நோய்ப்பாதுகாப்புக்கு நோயிலிருந்து அவரைக் காப்பாற்றவேண்டுமென்ற உணர்வைக் கொடுக்கப் போதுமானது. நோய் வந்தவர்கள் சுமார் மூன்றிலிருந்து ஆறு மாதத்தின் பின்னர் ஒரு தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று பிரான்ஸின் மக்கள் ஆரோக்கியத் துறை அறிவுறுத்தியது. இப்படியான ஒரு முடிவை முதலாவதாக எடுக்கும் நாடு பிரான்ஸ் தான்.
சாள்ஸ் ஜெ. போமன்