2020 இல் சுவீடனில் இறந்தவர்கள் தொகை அதை முந்திய வருடங்களை விட 7.9 % அதிகம்.
கடந்த ஐந்து வருடங்களின் சராசரி இறந்தவர்கள் தொகையைக் கடந்த வருடத்தில் இறந்தவர்கள் தொகையுடன் ஒப்பிடும்போது கடந்த வருடத்தில் இறந்தவர்கள் 7.9 % விகிதம் அதிகமாக இருக்கிறது. இப்படியான ஒரு அளவுக்கதிகமான இறப்பு சுவீடனில் 1918 ஸ்பானிய சளிக்காய்ச்சல் பரவியபோது தான் காணக்கூடியதாக இருந்தது.
கடந்த பதினைந்து வருடங்களில் மிகக்குறைந்த மக்கள் தொகை அதிகரிப்பு 2020 இல் ஏற்பட்டிருக்கிறது. சுமார் 51,000 பேரால் சனத்தொகை அதிகரித்திருக்கிறது.
கடந்த வருடம் இறந்தவர்களில் ஸ்டொக்ஹோம் பிராந்தியத்தில் இறந்தவர்கள் தொகை சுமார் 16.4 % அதிகம். வயது ரீதியாகக் கவனிக்கும்போது 75 – 84 வயதுள்ளவர்களிடையே 20.6 விகிதம் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது.
மற்றைய ஸ்கண்டினேவிய நாடுகளுடன் ஒப்பிடும்போது சுவீடனில் இறந்தவர்கள் தொகை அதிகம். ஆனால், ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது 22 நாடுகளில் கடந்த வருடம் இறந்தவர்கள் விகிதம் சுவீடனை விட அதிகமாகவும், எட்டு நாடுகளில் குறைவாகவும் இருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்