அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்து கொடுப்பதை உடனடியாக நிறுத்தியது டென்மார்க்.
டென்மார்க், மேலும் ஐந்து நாடுகளைப் போலவே அஸ்ரா செனகா தடுப்பூசி பெற்றவர்களுக்கு மோசமான பக்க விளைவுகள் உண்டாவதாகத் தெரிவதாகச் சொல்லி அந்தத் தடுப்பு மருந்தை நிறுத்தியிருக்கிறது. பக்க விளைவாகத் தடுப்பூசி பெறுபவருக்கு இரத்த அணுக்கள் இறந்திருப்பது தெரியவந்திருக்கிறது.
டென்மார்க்கின் மக்கள் ஆரோக்கிய அமைச்சு தாம் முதல் நடவடிக்கையாக, இரண்டு வாரங்களுக்கு அத்தடுப்பு மருந்து போடுவதை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட ஒருவர் இறந்த இரத்த அணுக்கள் ஏற்படுத்திய விளைவால் இறந்திருக்கிறார். எனவே ஏற்கனவே அஸ்ரா செனகாவின் முதலாவது தடுப்பூசி பெற்றவர்கள் இரண்டாவதற்காகப் பொறுத்திருக்கவேண்டும்.
நடந்ததன் விளைவாக டென்மார்க் தனது மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க ஆகஸ்ட் மாதம் வரை ஆகலாம் என்று அறிவித்திருக்கிறது. அதே சமயம் தடுப்பு மருந்துக்கும் குறிப்பிட்ட பக்க விளைவுகளுக்கும் நேரடியான சம்பந்தம் இருக்கிறதா என்று நிச்சமாகச் சொல்ல முடியாதென்றும், அதுபற்றி ஆராய ஐரோப்பிய ஒன்றியத்தில் தடுப்பு மருந்துகள் ஆராயும் அமைப்பிடம் கேட்டிருப்பதாகவும் டென்மார்க் குறிப்பிடுகிறது.
இதே போலவே மேலும் சில ஐரோப்பிய நாடுகளும் தாங்கள் டென்மார்க்கில் கவனிக்கப்பட்ட அதே குறிப்பிட்ட பக்கவிளைவுகளைக் கண்டிருப்பதால் அஸ்ரா செனகாவின் தடுப்பூசியை நிறுத்தியிருப்பதாகத் தெரிவிக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்