‘அஸ்ராஸெனகா’ மீதான தடை ஜரோப்பாவில் நீக்கப்படுகிறது பிரெஞ்சு பிரதமர் ஊசி ஏற்றுகிறார்.
இங்கிலாந்து-சுவீடன் கூட்டுத் தயாரிப் பாகிய ‘அஸ்ராஸெனகா’ வைரஸ் தடுப்பூசி “பாதுகாப்பானது, செயல்திறன் மிக்கது” என்று ஐரோப்பிய ஒன்றியத் தின் மருந்துகள் நிறுவனம் (European Medicines Agency – EMA)மீண்டும் உத்தர வாதம் வழங்கி உள்ளது.
இதனை அடுத்து அந்த தடுப்பூசியை இடைநிறுத்தி வைத்திருந்த பல நாடுகள் அதன் பாவனையை மீண்டும் ஆரம்பிக் கின்றன.
அஸ்ராஸெனகா தடுப்பூசி இரத்தம் உறைதல், மூளையில் இரத்தக் கட்டி போன்ற பக்க அறிகுறிகளுக்குக் காரணமாகின்றது என்ற அச்சம் எழுந்ததை அடுத்து இருபதுக்கு மேற்பட்ட
ஐரோப்பிய நாடுகள் அதன் பாவனையை இடைநிறுத்தி வைத்திருந்தன.
பிரான்ஸும் ஐரோப்பிய ஒன்றிய மருந்துகள் நிறுவனத்தின் மறு ஆய்வு அறிக்கை வரும் வரை தனது மக்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதை நிறுத்தியிருந்தது.
ஜரோப்பாவில் சுமார் இருபது மில்லியன் பேருக்கு அஸ்ராஸெனகா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. அதில் உடல் இரத்தக் கட்டிகளால் ஆக ஏழு பேரும், மூளை இரத்தக் கட்டிகளால் 18 பேரும் மாத்திரமே
பாதிக்கப்பட்டனர். இரத்தக் கட்டிகளுக் கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இருப்பது நிரூபிக்கப்படவில்லை-என்று ஐரோப்பிய
மருந்துகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
“தடுப்பூசியின் நன்மைகள் அதன் ஆபத்தைவிட அதிகம்” என்று ஐரோப்பிய ஒன்றிய மருந்துகள் நிறுவனத்தின் ஆய்வுக் குழு நிபுணர் டாக்டர் ஸ்ட்ராஸ் (Dr. Straus ) தெரிவித்திருக்கிறார்.
பிரான்ஸில் அஸ்ராஸெனகா ஊசி போடும் பணி இன்று வெள்ளிக்கிழமை மீள ஆரம்பமாகிறது. நாட்டின் பிரதமர்
தனக்கான தடுப்பூசியை இன்று பெற்றுக் கொள்ளவுள்ளார் என்று செய்தி வெளியாகி இருக்கிறது.
55 வயதான பிரதமர் தனது வயது வரம்பின் அடிப்படையில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கு இன்னமும் காத்திருக்க வேண்டும். ஆனால் தடுப்பூசி மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை
ஏற்படுத்துவதற்காகவும், அஸ்ராஸெ னகா பற்றிய அச்சத்தை அகற்றுவதற் காகவும் பிரதமர் விதிவிலக்காக முன்கூட்டியே ஊசி ஏற்றிக் கொள்கிறார். இதனை தொலைக்காட்சிப் பேட்டி ஒன் றில் அவரே வெளியிட்டிருந்தார்.
பிரதமரைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றும் அஸ்ரா ஸெனகா தடுப்பூசி ஏற்றிக் கொள்ள முன்வந்துள்ளது.
ஒரு மருத்துவ நிபுணராகிய சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் ஏற்கனவே அஸ்ராஸெனகா தடுப்பூசியை ஏற்றிக் கொண்டுள்ளார்.
அஸ்ராஸெனகா தடுப்பூசிப் பாவனை நிறுத்தப்பட்டால் அது ஜரோப்பாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை களைப் பெரிய அளவில் பாதிக்கும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. அதன் பாவனையை நிறுத்தாமல் தொடர்ந்து முன்னெடுக்குமாறு உலக சுகாதார நிறுவனமும் நாடுகளைக் கேட்டிருக் கிறது.
——————————————————————-
குமாரதாஸன். பாரிஸ்.