Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

இறுக்கமான ஈஸ்டர் கட்டுப்பாடுகள் ஜேர்மனியில் ஏப்ரல் 18 வரை நீடிப்பு தேவாலய வழிபாடு ஒன் லைனில்!

ஜேர்மனியில் தற்போது நடைமுறையில் உள்ள பொது முடக்கக் கட்டுப்பாடுகள் ஏப்ரல் 18 ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுகிறது. இடையில் ஈஸ்டர் திருநாளை ஒட்டி ஐந்து தினங்கள் கட்டுப்பாடு மிகத் தீவிரமாக இருக்கும் என்று அதிபர் அஞ் சேலா மெக்ரல் அறிவித்திருக்கிறார்.

நாட்டின் 18 மாநில அரசுகளின் தலைவர்களோடு நேற்றிரவு சுமார் பத்து மணித்தியாலங்கள் நடத்திய மரதன் ஆலோசனை யின் பிறகு அவர் புதிய கட்டுப்பாடுகளை செய்தியாளர்களுக்கு வெளியிட்டார்.

ஏப்ரல் ஒன்று முதல் ஐந்து வரை வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு மக்கள் வீடுகளில் தங்கியிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஆராதனைகளை இணையம் வழியாக (ஒன்லைன்) நடத்துமாறு தேவாலய நிர்வாகங்களிடம் கேட்கப்பட்டுள்ளது.

வீடுகளில் விருந்துண்ண ஒன்று கூடுவோர் எண்ணிக்கை இரண்டு வீடுகளைச் சேர்ந்த வளர்ந்தவர்கள் ஐவர் என்ற கணக்கிற்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மாறுபாடடைந்த ஆபத்தான வைரஸ் திரிபு காரணமாக நாடு புதிய தொற்று அலையை எதிர்கொள்கின்றது என்று அஞ்சேலா மெர்கல் எச்சரிக்கை செய்துள் ளார்.

தொற்றினால் மிக மோசமாகப் பாதிக்கப் பட்டிருக்கும் எல்லை நாடான போலந்தில் இருந்து தினமும் தொழிலுக்காக ஜேர்மனிக்குள் வருவோர் 48 மணித்தியாலங் களுக்குள் செய்யப்பட்ட வைரஸ் பரி சோதனைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓக்ஸ்போர்ட் அஸ்ராஸெனகா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே
உருவாகியுள்ள இழுபறி அரசியல் பதற்றமாக மாறி உள்ளது. இதனால் ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் சவாலைச் சந்தித்துள்ளன.

படம் :Deutsche Welle (DW) செய்திச் சேவை
—-
குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *